மாதவனின் ரசிகை!

0

ப்ளஸ் டூ படிக்கும் என் செல்லப் பெண் ரம்யாவை நினைத்தால் கவலையாக இருக்கிறது எனக்கு.

வீடு முழுக்க, பாத்ரூம் உள்பட அவளுடைய பேவரிட் சாக்லெட் ஹீரோ மாதவனின் ஆக்கிரமிப்புதான். எங்கே பார்த்தாலும் அவர் படம். நிமிடத்துக்கு நூறு தடவை அவர் பெயரை மேடி… மேடி… என்று ஜெபம் செய்வதும் சோ சுவீட் என்று அவர் படத்துக்கு முத்தமிடுவதும்… சே!
அந்த ஏ.சி. டூ டயர் கம்பார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தபோது, திடீரென்று நேருக்கு நேர் தன் கனவு ஹீரோ மாதவனைப் பார்த்தவுடன் ரம்யாவுக்குத் தலைகால் புரியவில்லை.

நான் சொல்லச் சொல்லக் கேட்காமல், ஓடிப்போய் ஆட்டோகிராஃப் நோட்டை நீட்டினாள்.
அவர் சற்றும் தயங்காமல் அதை வாங்கி ஏதோ சடசடவென எழுதிக் கையெழுத்துப் போட்டுத் திருப்பிக் கொடுத்தார்.
குடுடீ அதை! என்று ரம்யாவை அதட்டி வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். படிக்கும் வயதில் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள். இப்படிக்கு மாதவன் மணி மணியாக எழுதியிருந்தார் மாதவன்.
நானும் சாக்லெட் ஹீரோ மாதவனின் ரசிகனானேன்.

ஜி.பி.சதுர்புஜன்-

Leave a Reply