கர்ப்பப்பையையும் எடுக்கிறார் ஏஞ்செலீனா ஜூலி

0

julieமார்பக புற்றுநோய் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக தனது இரு மார்பகங்களையும் அகற்றிய ஹொலிவுட் நடிகை ஏஞ்செலீனா ஜூலி தனது கர்பப்பையையும் அகற்ற உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது 38 ஆவது பிறந்த தினத்தை நேற்று முன்தினம் கொண்டாடிய ஏஞ்செலீனா ஜூலி (வயது 37) அண்மையில், தனது இரு மார்பகங்களையும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆறு பிள்ளைகளின் தாயான இவர் தற்போது, தனது கர்ப்பப்பையையும் எடுப்பதற்கு முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏஞ்செலீனா ஜூலிக்கு, கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 50 வீதம் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே அவர் இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என உள்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply