5:13 am - Wednesday January 27, 2021

ரஷ்ய அரசியலைக் கலக்கும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை

putinரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் கடந்த 30 வரு­டங்­க­ளாக தன்­னுடன் வாழும் தனது மனை­வியை விவா­கா­ரத்து செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­தமை ரஷ்­யா­விலும் உலக அரங்­கிலும் பெரும் வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த விவா­க­ரத்து அறி­விப்பின் பின்­ன­ணியில் ஜிம்­னாஸ்டிக் வீராங்­க­னை­யொ­ருவர் இருக்­கலாம் என்ற தக­வல்கள் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினும் அவரின் மனைவி லியூட்­மி­லாவும் விவா­க­ரத்துச் செய்­ய­வுள்­ள­தாக கடந்த வியா­ழ­னன்று அறி­வித்­தனர்.

பல்லட் நடன நிகழ்ச்­சி­யொன்றை இணைந்து பார்­வை­யிட்ட இத்­தம்­ப­தி­யினர் ரஷ்ய தொலைக்­காட்­சி­யொன்­றுக்கு அளித்த செவ்­வி­யின்­போதே தாம் விவா­க­ரத்து செய்­ய­வுள்­ள­தாக அறி­வித்­தனர்.

தானும் மனை­வியும் சந்­திப்­ப­து­கூட அரி­தாக உள்­ள­தா­கவும் இரு­வரும் தனித்­த­னி­யாக வாழ்ந்­து­வ­ரு­வ­தா­கவும் புட்டின் தெரி­வித்தார். இதை அவரின் மனைவி லியூட்­மி­லாவும் ஆமோ­தித்து பேசினார்.

ரஷ்ய ஜனா­தி­ப­தி­யொ­ரு­வ­ரிடம் விவா­க­ரத்து செய்­யப்­போ­கி­றீர்­களா என தானாக முன்­வந்து கேள்வி கேட்­ப­தற்கு அந்­நாட்டு செய்­தி­யா­ளர்கள் துணிந்­தி­ருக்க மாட்­டார்கள் எனவும் இக்­கேள்­வியும் பதிலும் முன்­கூட்­டியே திட்­ட­மி­டப்­பட்­ட­தாக இருக்­கலாம் எனவும் மேற்­கு­லக ஊட­கங்கள் விமர்­சிக்­கின்­றன.

ரஷ்­யாவில் தம்­ப­திகள் விவா­க­ரத்து அதி­க­மா­க­வுள்­ளது. ஆனால், கடந்த 3 நூற்­றாண்­டு­களில் ரஷ்ய அரச தலை­வர்கள் எவரும் பத­வி­யி­லி­ருக்­கும்­போது விவா­காத்து செய்­த­தில்லை. அதனால் புட்­டினின் விவா­க­ரத்து செய்­தியை ரஷ்ய மக்கள் பலர் முதலில் நம்ப மறுத்­தனர்.

55 வய­தான லியூட்­மிலா முன்னாள் விமானப் பணிப்­ணொவார். 60 வய­தான விளா­டிமிர் புட்டின், சோவியத் யூனி­யனின் உளவு அமைப்­பான கே.ஜி.பியில் பணி­யாற்­றி­யவர் அவர் கிழக்கு ஜேர்­ம­னியில் கே.ஜி.பி. தலை­வ­ராக பணி­யாற்றச் செல்­வ­தற்கு சிறி­து­கா­லத்­துக்­குமுன் 1983 ஆம்­ஆண்டு லியூட்­மி­லாவை திரு­மணம் செய்­து­கொண்டார். நாட்டின் முதற்­பெண்­ம­ணி­யாக விளங்­கி­ய­போ­திலும் பொது­மக்கள் முன்­னி­லையில் லியூட்­மிலா தோன்­று­வது அரி­தாக இருந்­தது.

ரஷ்ய தலை­வர்­களில் மிகைல் கொர்­பசேவ் தவிர வேறு யாரும் தமது மனை­வியை பொது நிகழ்ச்­சி­க­ளுக்கு அதி­க­மாக அழைத்து வந்­த­தில்லை.

விளா­டிமிர் புட்டின் தற்­போ­தைய உலக நாடு­களின் தலை­வர்­களில் சற்று வித்­தி­யா­ச­மான ஒரு­வர்தான். ஜனா­தி­ப­தி­யான பின்­னரும் திறந்த மார்­புடன் குதி­ரை­ச­வாரி செய்தல், மீன்­பி­டித்தல், ஜூடோ விளை­யாட்டில் ஈடு­ப­டுதல், பர­சூட்டில் இறங்­குதல், பனிச்­ச­றுக்­கலில் ஈடு­ப­டு­வ­துடன் அவற்றை புகைப்­படம் பிடித்து வெளி­யி­டவும் அனு­ம­தித்­தவர் அவர்.

ஆனால் அவர் தனது குடும்­பத்­தி­னரை முன்­னி­லைப்­ப­டுத்­த­வில்லை. அவரின் மனைவி பொது­நி­கழ்ச்­சி­களில் அதிகம் கலந்­து­கொள்­ள­வில்லை. புட்­டி­னுக்கு 20:30 வய­தான இரு மகள்கள் உள்­ளனர். ஆனால் ரஷ்­யர்­கள்­கூட அவர்­களை கண்­டி­ருக்க மாட்­டார்கள்.

எவ்­வா­றா­யினும் புட்­டினின் காத­லிகள் குறித்து தக­வல்கள் அல்­லது வதந்­திகள் வெளி­வந்த வண்­ணமே இருந்தன. குறிப்­பாக மேற்­கு­லக ஊட­கங்­களில் இத்­த­கைய செய்­திகள் அதிகம் வெளி­யா­கின. அச்­செய்­தி­களை புட்டின் திட்­ட­வட்­ட­மாக நிரா­க­ரித்­தி­ருந்தார்.

இப்­போது 30 வய­தான ரஷ்ய முன்னாள் ஜிம்­னாஸ்டிக் வீராங்­க­னை­யான அலினா கபெ­யே­வாவை திரு­மணம் செய்­வ­தற்­கா­கவே புட்டின் தனது மனை­வியை விவ­ாகா­ரத்து செய்­துள்ளார் என கூறப்­ப­டு­கி­றது.

யார் இந்த அலினா கப­யேவா?

1983 ஆம் ஆண்டில் பிறந்த அலினா கபெ­யேவா. 12 வயதில் ஜிம்­னாஸ்டிக் போட்­டி­களில் பங்­கு­பற்ற ஆரம்­பித்தார். உடலை அற்­பு­த­மாக வளைக்கும் ஆற்றல் கொண்ட அலினா, இசை­யொ­ருங்கு ஜிம்­னாஸ்டிக் போட்­டி­களில் அதிக வெற்­றி­களை குவித்த வீராங்­க­னை­யாக விளங்­கு­கிறார்.

2000 சிட்னி ஒலிம்­பிக்கில் வெண்­க­லப்­ப­தக்­கத்­தையும் 2004 ஏதென்ஸ் ஒலிம்­பிக்கில் வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்றார். இவை தவிர உலக ஜிம்­னாஸ்டிக் சம்­பி­யன்ஷிப் போட்­டி­களில் 14 பதக்­கங்­க­ளையும் ஐரோப்­பிய சம்­பி­யன்ஷிப் போட்­டி­களில் 25 பதக்­கங்­க­ளையும் வென்­றவர்.

ஜிம்­னாஸ்­டிக்கில் ஒலிம்பிக், உலக சம்­பியன்ஷிப், ஐரோப்­பிய சம்­பி­யன்ஷிப், உலக கிண்ணப் போட்­டிகள், கிராண்ப்றீ போட்­டிகள் அனைத்­திலும் சம்­பியன் பட்டம் வென்ற 3 இசை­யொ­ருங்கு ஜிம்­னாஸ்டிக் வீராங்­க­னை­களில் ஒருவர் இவர்.

24 வயதில் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெற்ற அவர் மொட­லா­கவும் பணி­யாற்­றி­யவர். படு­க­வர்ச்­சி­யான போஸ்­களை கொடுத்த அவர், தற்­போது ரஷ்ய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னாக பதவி வகிக்­கிறார். ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினின் ஐக்­கிய ரஷ்யா கட்­சி­யி­லேயே எலினா கபெ­யே­வாவும் அங்கம் வகிக்கிறார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஜிம்­னாஸ்டிக் வீராங்­கனை அலினா கெப­யே­வா­வுடன் புட்­டி­னுக்கும் இடை­யி­லான “நட்பு” குறித்து 2008 ஆம் ஆண்டு “இதார் டாஸ்” எனும் ரஷ்ய பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டது.

அடுத்த 6 நாட்­களில் அந்­நி­று­வ­னமே மூடப்­பட்­டு­விட்­டது. அந்­நி­று­வ­னத்தின் உரி­மை­யா­ள­ரான கோடீஸ்­வரர் அலெக்­ஸாண்டர் லெபேதேவ், புட்­டி­னுடன் மோது­வ­தற்கு விரும்­ப­வில்லை.

எனினும் புட்­டி­னுக்கும் அலி­னா­வுக்கும் தொடர்­பி­ருக்­கி­றது என்ற கதைகள் ஓய்ந்­து­வி­ட­வில்லை. 3 வரு­டங்­க­ளுக்கு முன் புட்டின் மூலம் அலினா ஆண் குழந்­தை­யொன்றை பெற்றார் எனவும் தற்­போது அவ­ருக்கு 6 மாத வய­து­டைய பெண் குழந்­தை­யொன்று இருப்­ப­தா­கவும் அமெ­ரிக்­காவின் நியூயோர்க் போஸ்ட் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டது.

தற்­போது ஜனா­தி­பதி புட்­டினின் விவா­க­ரத்து அறி­விப்பை வெளி­யிட்­ட­தை­ய­டுத்து அலி­னாவை அவர் திரு­மணம் செய்­து­கொள்­ளப்­போ­கிறார் என் தக­வல்கள் வேக­மாக பரவி வரு­கின்­றன.எனினும் இச்­செய்­தி­களை புட்டினும் அலினாவும் நிராகரித்துள்ளனர்.

விளாடிமிர் புட்டின் மீண்டும் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை எனவும் அவர் தனது வாழ்க்கையை தொடர்ந்தும் ரஷ்ய ஜனாதிபதியாக அர்ப்பணிக்கவுள்ளார் எனவும் விளாடிமிர் புட்டினின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

புட்டின் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்பது வெறும் வதந்தியே எனவும் புட்டினின் பணி அட்டவணையை பாத்தால் அவருக்கு குடும்ப வாழ்வில் ஈடுபட நேரமில்லை என்பது சாதாரண கண்களுக்குகூட தெரியும் எனவும் திமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். இவற்றில் எது உண்மை என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Filed in: உலகம், கட்டுரைகள், கொறிக்க...

No comments yet.

Leave a Reply

You must be logged in to post a comment.