மரணதண்டனைக்கு விரைவில் தடை : ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூ

0

bankeemoonமரண தண்டனையை முற்றாக தடை செய்வது குறித்து விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனைக்கு எதிராக ஸ்பெய்ன் தலைநகர் மெட்ரிட்டில் இடம்பெற்ற ஐந்தாவது உலக மாநாட்டையொட்டி அனுப்பிய செய்தியிலேயே பான் கி மூன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் அச்செய்தியில் தெரிவிக்கையில், மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இருப்பினும் சட்டரீதியான நடைமுறைகள், மதப் பின்னணி, குறிப்பிட்ட பகுதிகளில் நிலவும் வாழ்வியல் சூழ்நிலை, கொடூரமான குற்றங்கள் போன்றவற்றால் ஒரு சில நாடுகளில் இன்னும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் 174 நாடுகள், மரண தண்டனையை ரத்து செய்வதாக கடந்த ஆண்டு அறிவித்துள்ளன. தற்போது குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளிலேயே மரண தண்டனை அமுலில் உள்ளது. இருப்பினும் அது கவலையளிப்பதாகவே உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply