அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடியுடனான மர்லின் மன்றோவின் பாலியல் உறவு ஒலிப்பதிவு செய்யப்பட்டது : முன்னாள் தனியார் புலனாய்வாளரின் குறிப்புகள் அம்பலம்

0

marlinஅமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­ன­டியும் ஹொலி­வூட்டின் கவர்ச்சி நடி­கை­யாக விளங்­கிய மர்லின் மன்­றோவும் பாலியல் உறவில் ஈடு­ப­ட்ட சம்­பவம் இர­க­சி­ய­மாக ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்­டி­ருந்­த­தாக புதிய தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

1960 ஆம் ஆண்டு தனது 42 ஆவது அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற ஜோன் எவ். கென்­னடி, அமெ­ரிக்­காவின் ஒரே­யொரு ரோமன் கத்­தோ­லிக்க, ஜனா­தி­பதி, இரண்டாம் உலக யுத்­த­கால படை வீரர், புலிட்ஸர் விருது வென்ற ஒரே அமெ­ரிக்க ஜனா­தி­பதி, இன சமத்­து­வத்தில் ஆர்வம் கொண்­டவர், கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்கு சம­வு­ரி­மை­ய­ளிக்கும் சட்­ட­மூ­லத்தை முன்­வைத்­தவர் முத­லான பல்­வேறு கார­ணங்­களால் அமெ­ரிக்­காவின் புகழ்­பெற்ற ஜனா­தி­ப­தி­யாக விளங்­கினார்.

kennedy1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பத­வி­யி­லி­ருக்­கும் ­போதே சுட்­டுக்­கொல்­லப்­பட்­டமை உலகம் முழு­வதும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது. அவர் எதற்­காக கொல்­லப்­பட்டார் என்­பது இன்னும் மர்­ம­மாக உள்­ளது. ஆனால், ஜக்­கு­லினை திரு­மணம் செய்­தி­ ருந்த ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­னடி, அக்­கா­லத்தில் புகழ் ­பெற்ற ஹொலிவூட் நடி­கை­யாக விளங்­கிய மர்லின் மன்­றோ­வுடன் உறவு கொண்­டி­ருந்­தாக கூறப்­படும் தொடர்­புகள் கென்­ன­டியின் வாழ்க்கை குறித்த சர்ச்­சை­க­ளுக்கு வழி­வ­குத்­தன.

இப்­போது ஜோன் எவ். கென்­னடி, மர்லின் மன்றோ இரு­வரின் பாலியல் உற­வு­களும் இர­க­சிய ஒலிப்­ப­திவு சாத­னங்­களின் மூலம் பதி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தது என்ற தக­வலும் வெளி­யா­கி­யுள்­ளது.
1950 மற்றும் 60களில் அமெ­ரிக்­காவின் பிர­பல தனியார் நிறு­வன உள­வா­ளி­யாக விளங்­கிய பிரெட் ஒட்டாஷ் என்­பவர் எழு­தி­வைத்த குறிப்­பு­களில் மேற்­படி பாலியல் சம்­ப­வத்தின் ஒலிப்­ப­திவை தான் கேட்­ட­தாக தெரி­வித்­துள்ளார்.

பிரெட் ஒட்டாஷ் 1992 ஆம் ஆண்டு கால­மா­னமை குறிப்­பி­டத்­தக்­கது. இரு தசாப்த கால­மாக களஞ்­சிய அறை­யொன்றில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பிரெட் ஒட்­டாஷின் இர­க­சிய கோவை­களை அவரின் மக­ளான கொலினின் மூலம் கண்­ட­தாக ஹொலிவூட் ரிப்­போர்ட்டர் எனும் சஞ்­சிகை தெரி­வித்­துள்­ளது.
1960களில் அமெ­ரிக்க ஜன­நா­யகக் கட்­சிக்கும் குடி­ய­ரசுக் கட்­சியும் கடும் போட்­டிகள் நில­வி­ய­வே­ளையில் இரு தரப்­பி­னரும் மறு­த­ரப்பின் தவ­று கள், ஒழுங்­கீ­னங்­களை அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தற்கு போட்­டி­யிட்­டனர்.

ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­னடி உட்­பட ஜன­நா­யகக் கட்­சி­யி­னரின் திரை­ம­றைவு செயற்­பா­டு­களைக் கண்­ட­றிந்து அவற்றை தமக்கு சாதகமாக பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக குடி­ய­ரசுக் கட்­சியைச் சேர்ந்த கோடீஸ்­வரர் ஹோவார்ட் ஹியூஸ், மற்றும் ரிச்சர்ட் நிக்ஸன் சார்பில் பணிக்கு பிரத்­தி­யேக உள­வா­ளி­யாக பிரெட் ஒட்டாஷ் நிய­மிக்கப்­பட்ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­ன்றது.

ஜனா­தி­பதி கென்­ன­டியும் மர்லின் மன்­றோவும் கலி­போர்­னியா மாநி­லத்தின் மாலிபு நக­ரி­லுள்ள நடிகர் பீட்டர் லோபோர்ட்டின் வீடொன்றில் பாலியல் உற­வு­கொண்ட காட்சி வீடி­யோவில் பதி­வு­செய்­யப்­பட்­டதை ஒட்டாஷ் கேள்­விப்­பட்­டாராம். கென்­ன­டியின் சகோ­தரி பட்­ரி­ஷி­யாவை திரு­மணம் செய்­தி­ருந்­தவர் நடிகர் லோபோர்ட்.

அவ்­வீட்டில் இடம்­பெற்ற உளவு நட­வ­டிக்கை குறித்து ஒட்டாஷ் எழு­தி­வைத்­துள்ள குறிப்பில், “மர்லின் மன்றோ மேற்­படி திட்­டத்தின் ஒரு பகு­தி­யாக இருக்­க­வில்லை. ஜன­நா­ய­கக்­கட்­சி­யினர் என்ன செய்­கி­றார்கள் என அறி­வ­தற்­காக ஹோவார்ட், நிக்ஸன் ஆகியோர் சார்­பாக கண்­ட­றி­வதே அத்­திட்­ட­மாகும். மர்லின் மன்றோ ஒரு பக்க விளை­வுதான்” எனத் தெரி­வித்­துள்ளார்.

ஆனால், அந்த பாலியல் சம்­ப­வத்­துக்கு முந்­திய காலக் குறிப்­புகள், ஜனா­தி­பதி கென்­ன­டியை பாலியல் வலையில் சிக்க வைப்­ப­தற்கு மர்லின் மன்றோ முயற்­சித்­ததைக் காட்­டு­கின்­ற­னவாம்.
“மர்லின் ஒரு மினி தொலை­பேசி கேட்டல் கரு­வி­யொன்று வேண்­டு­மென்றார். அக்­க­ரு­வியை பிராவில் மறைத்­து­வைத்­துக்­கொள்ள முடியும். மைக்ரோ போன் கரு­வி­யா­னது கைக்­க­டி­கா­ரத்தின் வடிவில் இருக்கும்” என ஒட்டாஷ் தெரி­வித்­துள்ளார்.

1962 ஓகஸ்ட் 5 ஆம் திகதி தனது 36 ஆவது வயதில் மர்லின் மன்றோ உயி­ரி­ழந்த நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்டார். அவர் தற்­கொலை செய்­து­கொண்­டாரா கொலை செய்­யப்­பட்­டாரா என்­பது ஹொலிவூட் வர­லாற்றின் நீண்­ட­கால சர்ச்­சை­களில் ஒன்­றாகும்.

அவர் சிலரால் திட்­ட­மி­டப்­பட்ட வகையில் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் எனக்­கூ­றப்­பட்­ட­துடன் இது தொடர்­பாக பல்­வேறு கதைகள் உலா­வின. ஆவற்றுள் சில கதைகள் ஜனா­தி­பதி ஜோன் எவ்.கென்­னடி, அவரின் சகோ­தரர் ரொபர்ட் எவ்.கென்­னடி தொடர்­பா­ன­வை­யாகும்.

மர்லின் மன்றோ இறப்­ப­தற்கு முன்னர் அவரால் இறு­தி­யாக தொலை­பேசி அழைப்பு விடுக்­கப்­பட்ட நபர் ஜனா­தி­பதி கென்­ன­டிதான்.

மர்லின் மன்றோ இறந்த தினத்தில் மன்­றோ­வுக்கும் ஜனா­தி­பதி ஜோன் எவ் கென்­ன­டியின் சகோ­த­ரர்­களில் ஒரு­வ­ரான ரொபர்ட் கென்­னடி ஆகி­யோ­ருக்­கி­டையில் கடும் வாக்­கு­வா­தங்கள் இடம்­பெற்­ற­தாக புதி­தாக வெளி­யி­டப்­பட்­டுள்ள தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
ஜோன் எவ்.கென்­னடி மற்றும் அவரின் சகோ­த­ரர்­களின் மீதும் மர்லின் மன்றோ பாலியல் உறவு கொண்­டி­ருந்­த­தா­கவும் தான் “ஓர் மாமிசத் துண்­டு­போன்று பரி­மா­றப்­ப­டு­வ­தாக” மர்லின் மன்றோ விமர்­சித்தார் எனவும் ஒட்டாஷ் தெரி­வித்­துள்ளார்.

வெள்ளை மாளி­கையின் முன்னாள் ஊழி­ய­ரான மிமி அல்­பிரெட் என்­பவர் தனது கடந்த வருடம் வெளி­யிட்ட நூலொன்றில் தான் 19 வயது யுவதியாக இருந்தபோது ஜனாதிபதி கென்னடியுடன் அந்தரங்க தொடர்புகள் ஆரம்பமானமை குறித்து தெரிவித்திருந்தார். கென்னடியின் இளைய சகோதரரான டெட் கென்னடி உட்பட ஏனைய ஆண்களுடன் பாலியல் சேவைகளை வழங்குமாறு ஜனாதிபதி கென்னடி இரு சந்தர்ப்பங்களில் கோரியமை குறித்து அந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.

பொபி கென்னடி எனவும் அழைக்கப்பட்ட ரொபர்ட் கென்னடியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1968 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply