சீனாவில் திறந்து வைக்கப்பட்ட உலகின் நீளமானதும் அகலமானதுமான தொங்கு பாலத்தின் பணிகள் பூர்த்தி

0

bridgeஉலகின் மிக நீளமானது அகலமானதுமான தொங்கு பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 7 வருடங்களின் பின்னர் கடந்த திங்கட் கிழமை முழுமையடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

10 கி.மீ நீளமும் 2560 அடி அகலமுமான இத்தொங்கு பாலம் கடந்த மாதம் 28ஆம் திகதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும் இதன் கட்டுமானப் பணிகள் கடந்த திங்கட் கிழமையான்று சுமார் 7 வருடங்களின் பின்னரே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

தற்போது உலகில் அமைக்கப்பட்டுள்ள அதி நீளமானது அகலமானதுமான தொங்கு பாலம் என்ற சாதனையை இப்பாலமே தன் வசம் வைத்துள்ளது.

சீனாவின் கைகாங் மாவட்டத்திலிருந்து ஆரம்பமாகி ஹெளசாய் மாவட்டதில் முடிவடையில் இப்பாலத்தின் மீது 60 கி.மீ குறையாமலே பயணிக்க வேண்டும். மேலும் இதில் பாசதசாரிகள் மோட்டா சைக்கிள் மற்றும் மணிக்கு 45 கி.மீ வேகத்திற்கு குறைவாகச் செல்லும் வாகனங்கள் செல்லுவதும் தடைசெய்யப்பட்டுள்ளளது.

Leave a Reply