9:10 pm - Thursday June 20, 2019

50 தொன் நிறையுடைய விமானத்தை பல்லால் இழுத்து சாதனை – வீடியோ இணைப்பு

airஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நபரொருவர் வணிக ரீதியான 50 தொன் (45359.2 கி.கி) நிறையுடைய ஏயார் பஸ்; ஒன்றினை பல்லினால் இழுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

சோல்ட் சிங்கா என்ற நபரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் ஏ320 என்ற வணிக ரீதியிலான ஏயார் பஸ்ஸை 51 செக்கன்களில் 39.2 மீற்றர் தூரம் இழுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பிற உதவிகள் எதுவுமின்றி கைறு ஒன்றினை வாயினால் கடித்துக்கொண்டு ஏயார் பஸ்ஸை இழுக்க ஆரம்பித்துள்ளார் சிங்கா. இதன்போது அருகில் இருந்த நடன மங்கைகள் அவரை உற்சாகமூட்டினர்.

இதற்கு முதல் லக்ஷ்சம் பேர்க்கை சேர்ந்த ஜோர்ஜ் என்பவர் பஸ் ஒன்றை பல்லினால் இழுத்ததே சாதனையாக இருந்தது.

Filed in: அதிசய உலகம், உலகம், கொறிக்க..., வீடியோ

No comments yet.

Leave a Reply

You must be logged in to post a comment.