370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டபின் புனர்வாழ்வு பெற்று திருந்தி வாழும் பெண்

0

thumபிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் 370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டுள்ளதாக கூறுகிறார். சேயி கோலாட் எனும் பெண் 35 வயதானவர்.

ஒரு காலத்தில் செக்ஸ் உறவுக்கு அடிமையானவராக சேயி கோலாட் காணப்பட்டார். 14 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டார் அவர், அக்குழந்தை சமூக சேவைத்துறையினரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டது.

17 வயதானபோது தனது அப்பேதைய காதலரின் வீட்டில் வசிக்கச் சென்றார். எனினும் காதலருக்கு துரோகம் செய்துவிட்டு பலருடன் உறவு கொள்ள ஆரம்பித்தார். தனக்கு 19 வயதானபோது 40 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தாராம் சேயி கோலாட்.

சுமார் 13 வருடகாலம் ஒருநாள்கூட பாலியல் உறவில் ஈடுபடாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

இதனால் அவர் அனுபவித்த துன்பங்கள் கொஞ்சமல்ல. அவருக்கு பாலியல் தொற்றுநோய்கள் ஏற்பட்டன. அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். முகாமைத்துவ ஆலோசகராக பணியாற்றிய அவர் அத்தொழிலை இழந்தார். 26 வயதில் அவருக்கு இரண்டாவது குழந்தையும் பிறந்தது.

30 வயதானபோது தான் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் இருப்பதை சேயி கோலாட் உணர்ந்தார். அதிலிருந்து மீள்வதற்கு தனக்கு உதவி தேவை எனக் கருதினார்.

அதையடுத்து செக்ஸ் அடிமைத்துவத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகளை பெற ஆரம்பித்தார். 12 கட்டங்கள் கொண்ட புனர்வாழ்வு செயற்திட்டங்களில் பங்குபற்றிய சேயி கோலாட் வெகுவாக மாறிப்போனார்.

thum2கடந்த நான்கு வருடங்களில் அவர் பாலியல் உறவில் ஈடுபடவே இல்லையாம். தற்போது அவர் தன்னைப் போன்ற ஏனையோருக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

“பாலியல் அடிமை நிலையை பொதுவாக ஆண்களுடன் தொடர்புபடுத்தும் ஒரு விடயமாகவே மக்கள் கருதுவர். ஆனால் அது எனது வாழ்க்கையில் 13 வருடங்களுக்கு மேலாக என்னை ஆட்டிப்படைத்தது” என்கிறார் சேயி கோலாட்.

“அதிலிருந்து விடுபடுவதற்கு ஏங்கினேன். என்னால் விடுபட முடியாவிட்டால் என்ன நடக்குமோ என அஞ்சினேன். அதிலிருந்து விடுபட்டபின் என்னை அழுத்திக்கொண்டிருந்த பெரும் சுமை அகற்றப்பட்டதைப் போல் இருந்தது.

ஏனைய வகை அடிமை நிலையைப் போன்று இதுவும் என்னை சுயநலம் மிக்கதாகவும் சுய அழிவை ஏற்படுத்துவதாகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. ஆனால் அப்போது என்னால் அதிலிருந்து விடபட முடியவில்லை” என அவர் கூறுகிறார்.

எனினும், 31 வயதில் தொழிலையும் விட்டுவிட்டு, தனது சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகளை பெற ஆரம்பத்தார் சேயி. அவமானகரமான நிலையிலிருந்து தான் எப்படியும் மீண்டுவிட வேண்டும் என உறுதிகொண்ட அவர், புனர்வாழ்வு சிகி;ச்சைகளுக்கு தவறாமல் செல்ல ஆரம்பித்தார்.

இனி அண்மைக்காலத்தில் பாலியல் உறவில் ஈடுபடும் எண்ணம் தனக்கில்லை என்கிறார் சேயி கோலாட். “சரியான ஒரு நபரை நான் சந்தித்து, நான் உறுதியாக இருப்பதாக உணர்ந்து, அன்பான உறவுமுறையும் இருந்தால் நான் மீண்டும் பாலியல் உறவில் ஈடுபடுவது பாதுகாப்பானது எனக் கருதுவேன். எனது பிள்ளைகள் மீண்டும் என்னிடம் வந்துவிட்டார்கள்.

இப்போது என்னை பாலியலுக்கு அடிமையானவளாக நான் கருதவில்லை. நான் உதவிகளை பெற்றிருக்காவிட்டால் எனது வாழ்க்கை இன்னும் மோசமான நிலையை அடைந்திருக்கும்.

இப்போது நான் மற்றவர்களுக்கு உந்துதலை அளிக்கும் பேச்சாளராக பயிற்சிபெற்றுள்ளேன். செயலமர்வுகள், கருத்தரங்குகளின்போது, மற்றவர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ என்னால் முடிகிறது” என்கிறார் சேயி கோலார்ட்.

Leave a Reply