5:23 am - Wednesday January 20, 2021

நிலவுக்கு சென்ற முதல் மனிதர் யார்?: நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்தது போன்ற காட்சிகள் அமெரிக்காவின் திரைப்படமா?

flag-waving-moon-landingநீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்­த­துவே 20ஆம் நூற்­றாண்டின் மிகப் பெரும் அறி­வியல் சாதனை என உறு­தி­யாகக் கூற முடியும். ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங்; நிலவில் கால் பதித்தார் என்­பதை அறி­வியல் உல­கினால் இது­வ­ரையில் உறு­தி­யாக நம்­ப­மு­டி­ய­வில்லை.

சந்­தி­ரனில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ரோங் என உலக மக்­களை நம்ப வைத்த அமெ­ரிக்­காவின் முயற்சி சில­ரிடம் பலிக்­க­வில்லை என்­பதே உண்மை. காரணம் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதி;த்ததன் பின்னர் அது உண்­மையா? பொய்யா? என்ற பட்­டி­மன்றம் நடத்­தாத குறை­யாக பல விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் ஒன்­றுக்­கொன்று முர­ணான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

இக்­குற்­றச்­சாட்டு இன்­றில்லை பல கால­மா­கவே இருந்து வரு­கி­றது. ஆனால் முற்­றுப்­புள்ளி இல்­லாமல் நீண்டு செல்லும் இந்த விட­யத்தில் அண்­மையில் திருப்­பத்தை ஏற்­ப­டுத்தும் வித­மாக தக­வ­லொன்று வெளி­யா­கி­யுள்­ளது.

நீல் ஆம்ஸ்ட்ரோங் உண்­மையில் சந்­தி­ர­னுக்கு செல்­ல­வில்லை எனவும் அது என் கண­வ­ரினால் பட­மாக்­கப்­பட்ட திரைப்­ப­டமே என முறைந்த முன்னாள் ஹொலிவூட் இயக்­கு­ன­ரான ஸ்டேன்லி கியூப்­ரிக்கின் மனைவி தகவல் வெளி­யிட்­டுள்­ள­தாக இணை­யத்­த­ளங்­களில் கூறப்­ப­டு­கி­றது.

அதா­வது முதன் முத­லாக சந்­தி­ரனில் கால்­ப­திக்கும் போது நேரடி ஒளி­ப­ரப்பு என அமெ­ரிக்கா காண்­பித்த வீடி­யோ­வா­னது ஏற்­க­னவே படப்­பி­டிப்பு தள­மொன்று அமைத்து பட­மாக்­கப்­பட்ட காட்சி எனவும் அதில் பல தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார்.

விஞ்­ஞானப் புனை­க­தை­களில் அதிக ஆர்வம் கொண்ட ஹொலிவூட் திரைப்­ப­டத்­துறை கலை­ஞர்கள் குறித்த படப்­பி­டிப்பை அமெ­ரிக்க படைகள் மட்டும் உட்­செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட பிர­தே­ச­மொன்றில் சில நாட்­க­ளாக செயற்­கை­யாக வடி­வ­மைக்­கப்­பட்ட செட் ஒன்றில் வைத்து பட­மாக்­கி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்­கர்கள் உள்­ளிட்ட பல­ரையும் ஏமாற்­றிய அந்த நிலவில் பதிக்கும் காட்­சியில் உண்மைத் தன்மை இல்லை என ஏற்­க­னவே அமெ­ரிக்க விஞ்­ஞானி ரால்ப் ரெனி, விண்­வெளி ஆராய்ச்­சி­யாளர் பில் கேசிங் உள்­ளிட்ட உலகின் பல அறி­வி­ய­லா­ளர்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர். இந்­நி­லையில் கியூப்­ரிக்கின் மனை­வியின் தகவல் மேலும் அதிர்ச்­சி­யூட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.

உல­கி­லேயே விண்­வெளி ஆராய்ச்­சி­க­ளுக்கு வித்­திட்டு முன்­னோ­க­ளாக திகழ்ந்­ததும் நில­வினைப் பற்­றிய ஆராய்ச்­சி­களை முதன் முதலில் ஆரம்­பித்­ததும் சோவியத் யூனி­யன்தான். அவர்கள் 1930ஆம் அண்­டி­லேயே நிலவின் மீதான ஆரா­ய்ச்­சி­களை ஆரம்­பித்­து­விட்­டனர். மேலும் நில­விற்கு விண்­க­லத்­தினை முதன் முதலில் ஆளில்லா விண்­க­லத்­தினை அனுப்­பி­ய­துடன் இரு­ப­துக்கும் மேற்­பட்ட ஆளில்லா விண்­க­லங்­களை சந்­தி­ர­னுக்கு அனுப்­பி­யுள்­ளனர்.

இதன் உச்­சக்­கட்­ட­மாக 1957ஆம் ஆண்டு “லைகா” எனும் நாயை வைத்து சந்­தி­ர­னுக்கு விண்­க­ல­மொன்­றினை அனுப்­பினர். இதுவே உயி­ரி­ன­மொன்று சந்­தி­ர­னுக்கு சென்ற முதல் சந்­தர்ப்­ப­மாகும். இவர்கள் அனுப்­பிய “லைகா” நாயா­னது எது­வித ஆபத்­து­மின்றி புவிக்கு திரும்­பி­ய­த­னை­ய­டுத்து உல­கமே சோவியத் யூனியன் பக்கம் தலை நிமிர்ந்து பார்த்­தது. இந்த வெற்­றி­களைத் தொடர்ந்து மனி­த­னையும் சந்­தி­ர­னுக்கு அனுப்ப முடிவு செய்­தது.

இதற்­காக சோவியத் யூனி­யனைச் சேர்ந்த மூன்று பேரை சோதனை முயற்­சி­யாக நில­விற்கு அனுப்பும் முயற்­சியின் போது அவர்­களை ஏற்­றிச்­சென்ற ரொக்கெட் புறப்­பட்ட சில மணி நேரத்­தி­லேயே வெடித்துச் சித­றி­யது. அதில் பய­ணித்த மூவரும் உயி­ரி­ழந்­தனர். இதனால் மூன்று உயிர்­களை காவு­கொண்ட வருத்­தத்தில் சோவியத் யூனியன் மனித உரி­மைக்கு எதி­ராக செயற்­பட்­ட­தாக கூறி நில­விற்கு மனி­தர்­களை அனுப்பும் சோதனை முயற்­சி­யி­லி­ருந்து பின் வாங்­கி­யது.

இந்­நி­லையில் சோவியத் யூனி­ய­னுடன் பனிப் போரி­லி­ருந்த அமெ­ரிக்கா சந்­திரன் தொடர்­பான ஆராய்ச்­சியில் முன்­னிலை பெற முடிவு செய்து நில­வுக்கு மனி­தர்­களை அனுப்பும் திட்­டத்­தினை துரிப்­ப­டுத்­தி­யது. பின்னர் நீல் ஆம்ஸ்ட்­ரோங்கை விண்ணில் நிலவை நோக்கி அனுப்பி மண்ணில் மைந்­த­னாக பெய­ரெ­டுத்­தது அமெ­ரிக்கா.

ஆனால் அந்த பெய­ருக்கு தகுதி உடை­ய­து­தானா அமெ­ரிக்கா என கேள்வி கேட்கும் வகையில் அமைந்­து­விட்­டது நீல் ஆம்ஸ்ட்­ரோங்கின் நிலவை நோக்­கிய அமெ­ரிக்­காவின் பயணம். அந்த பய­ணத்தை அன்று 1969 ஜுலை 16ஆம் திகதி நேர­டி­யாக சந்­தி­ரனில் கால்­ப­திக்கும் காட்­சியை வெளி­யிட்­டது அமெ­ரிக்கா. ஆனால் அந்த காட்சி ஒரு திரைப்­ப­ட­மாக்க உரு­வாக்­கிய விஞ்­ஞானப் புனைக்­கதை போன்­றது என பலரும் கூறு­கி­றார்கள்.

ஏன் அமெ­ரிக்­காவின் வீடியோ பதிவு உண்மை இல்லை என்ற பல­மான கருத்­துக்கள் முன் வைக்­கப்­ப­டு­கி­றது. வடி­வே­லுவின் பாணியில் பேய் இருக்கா? இல்­லையா? பார்த்­தி­ருங்­காய்ங்­களா? பார்க்­கல்­லையா? என்­ற­வா­றானா கேள்­விகள், நீல் ஆம்ஸ்ட்ரோங் விட­யத்­திலும் ஏற்­படக் காரணம் என்ன? அப்­படி என்ன விட­யங்கள் தவ­றான விதத்தில், அந்த நிலவில் கால் பதித்த வீடி­யோவில் அடங்­கி­யுள்­ளது எனக் அறி­வி­ய­லா­ளர்கள் கூறு­கின்­றார்கள் என பார்ப்போம்.

#சந்­தி­ரனில் காற்று இல்லை என்றால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நட்ட அமெ­ரிக்க கொடி எவ்­வாறு பறக்­கின்­றது?
#ஈர்ப்பு சக்தி இல்லா ஓரி­டத்தில் எவ்­வாறு வானத்தை புழுதி கிளப்­பிக்­கொண்டு தரையில் ஓட்டிச் செல்ல முடி­கி­றது?
#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் சந்­தி­ரனில் கால் பதித்தார் எனில் அவர் கால் பதிக்கும் காட்­சியை விண்­வெளி ஓடத்­திற்கு வெளியில் இருந்து யார் படம் பிடித்­தது? ஏனெனில் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த உடையின் நெஞ்சுப் பகு­தி­லேயே கமெரா இணைக்­கப்­பட்­டுள்­ளது எனவே அவர் தரை­யி­றங்­கி­யதை படம் பிடித்­தது எவ்­வாறு சாத்­தியம்?
#நில­வி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களின் பின்­ன­ணியின் எந்­த­வொரு நட்­சத்­தி­ரத்­தையும் காண­வில்­லையே?அப்­பலோ 11 விண்­வெளி ஓடம் தரை­யி­றங்­கி­ய­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் இல்லை. அதே­வேளை அது தரை­யி­றங்­கிய பகு­தியில் கால்­தடம் இவ்­வ­ளவு தெளி­வாக இருப்­பது எப்­படி சாத்­தியம்?
#பல்­வேறு பக்­கங்­களில் நிழல் தெரி­கி­றது அது ஏன்? நிலவில் ஒளி­யில்லை சூரி­ய­னி­லி­ருந்து கிடைக்கும் ஒளி­யி­லேயே நிலா பிர­கா­ச­மாக தெரி­கி­றது. ஆனால் பல ஒளி மூலங்கள் (லைட்டிங் செய்­தது போல) பிர­யோ­கிக்­கப்­பட்­டது போல் ஒரே நேரத்தில் வெவ்வேறு திசை­களில் நிழல் தெரி­வது ஏன்?
#முதன் முதலில் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்த மற்றும் அவ­ருடன் பய­ணித்த கொலின் மற்றும் அல்ரின் ஆகியோர் அணிந்­தி­ருந்த கால­ணியில் அடியில் இருக்கும் வடி­வமும் சந்­தி­ரனில் பதித்த கால் தடமும் ஒத்துப் போகாமல் இருப்­பது ஏன்?

இது­போன்ற இன்னும் ஏரா­ள­மான தர்க்க ரீதி­யான வாதங்­களும் அறி­வியல் ரீதி­யான வாதங்­களும் அறி­வி­ய­லா­ளர்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இக்­கேள்­விகள் மற்றும் அது தொடர்­பான விளக்­கங்கள் அடங்­கிய வீடி­யோ­வினை www.metronews.lk என்ற எமது இணை­யத்­த­ளத்தில் பார்­வை­யி­டலாம்.

குறித்த நிகழ்வு நடை­பெற்று சுமார் 44 ஆண்டுகள் நிறைவு பெறும் தறுவாயிலும் அதன் உண்மைத் தன்மை குறித்த சர்ச்சை கள் நிலவுவது துரதிர்ஷ்டமே. ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்த நிகழ்வு தொடர்பில் நாசாவிற்கு மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதாகவும் அதனை நாசா தவிர்த்து வந்ததாகும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் உண்டு.

இவ்வாறு பல சந்தேகங்களை எழுப்புகின்ற இவ்விடயத்திற்கு உண்மையில் யார் முதன் முதலில் சந்திரனில் கால் பதித்தார் என்ற விடையுடன் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? அதுவரை சந்திரனில் முதலில் காலடி பதித்தவர் என்ற கேள்விக்கு அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ரோங் என்பதுதான் பதில்.

-அமானுல்லா எம். றிஷாத்

Filed in: உலகம், கட்டுரைகள், கொறிக்க...

No comments yet.

Leave a Reply

You must be logged in to post a comment.