கணினி மௌஸினைக் கண்டுபிடித்தவர் 88 வயதில் மரணம்

0

mouseகணி­னியை இயக்­கு­த­வற்கு தேவை­யான முக்­கிய பாகங்­களில் ஒன்­றான “மௌஸ்” என்ற சாத­னத்தைக் கண்­டு­பி­டித்த டொக் எங்­கல்பர்ட் கடந்த 2ஆம் திகதி அவ­ரது 88ஆவது வயதில் மர­ண­ம­டைந்­துள்ளார்.

டொக் மர­ண­ம­டைந்த செய்­தி­யினை அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்­தி­லுள்ள மௌண்டெய்ன் வீவ் எனு­மி­டத்தில் அமைந்­துள்ள கணினி வர­லாற்று அருங்­காட்­சி­யகமே உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த அருங்­காட்­சி­யத்­திற்­காக டொக், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தனது சேவை­யினை வழங்கி வரு­கிறார். இந்­நி­லையில் கடந்த செவ்­வாய்­க்கி­ழமை தனது 88ஆவது வயதில் டொக் உயி­ரி­ழந்­துள்ளார்.

இது குறித்து அருங்­காட்­சி­யக நிர்­வாகம் கூறு­கையில், டொக் மர­ண­ம­டைந்த செய்­தியை புதன்கிழ­மையே அவ­ரது மகள் ஈ-மெய்ல் மூலம் எமக்கு தெரி­யப்­ப­டுத்­தினார். இதில் அவ­ரது மர­ணத்­திற்­கான காரணம் எதுவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை எனத் தெரி­வித்­துள்­ளது.

1950 மற்றும் 1960ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் பெரிய ஒரு அறையை நிரப்பிக்கொண்டிருந்த கணனியை சுருக்கமாக அமைத்த பெருமை இவருக்கே உண்டு.

Leave a Reply