9:20 pm - Thursday October 29, 2020

92 வயதான தாத்தா 22 வயதான இளம் மங்கையுடன் திருமணம்

oldmanஈராக்கைச் சேர்ந்த 92 வய­தான தாத்தா 22 வய­தே­யான இளம் பெண்­ணொ­ரு­வரை திரு­மணம் செய்­து­கொண்­டுள்ளார்.

மூஸா­அலி மொஹம்மட் அல்-­மு­ஜாமி என்ற 92 வய­தான நபரே, தன்னை விட 70 வயது குறைந்த 22 வய­தான பெண்ணை கடந்த வியா­ழக்­கி­ழமை கப்பான் எனு­மி­டத்தில் வைத்து திரு­மணம் செய்­துள்ளார்.

58 வரு­டங்கள் ஒன்­றாக வாழ்ந்த இவ­ரது முத­லா­வது மனைவி கடந்த 2010ஆம் ஆண்டில் உயி­ரி­ழந்­துள்ளார். இந்த தம்­ப­தி­யினர் 16 பிள்­ளை­களைப் பெற்று அவர்­களை சிறப்­பான முறையில் வளர்த்­துள்­ளனர்.

இந்­நி­லையில், அல்-­மு­ஜாமி பக்­தாத்­திற்கு அரு­கி­லுள்ள கப்பான் என்ற கிரா­மத்தில் வைத்து ஆட்டம் பாட்டம் என 4 மணித்­தி­யா­லங்கள் பெரும் கொண்­டாட்­டத்­திற்கு மத்­தியில் 22 வய­தான பெண்ணை திரு­மணம் செய்­துள்ளார்.

இதன் போது அல்-­மு­ஜா­மியின் திரு­மண நிகழ்வின் போது அவ­ரது 16 மற்றும் 17 வய­தான இரு பேரன்­க­ளுக்கு அதே மண்ட­பத்தில் திரு­மணம் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இது குறித்து அல்-­மு­ஜாமி கூறு­கையில், நீண்ட நாட்­க­ளாக எதிர்­பார்த்து காத்­தி­ருந்த மிக முக்­கி­ய­மான நாள் ஆகும். ஏனெனில் எனது பேரப்­பிள்­ளை­களின் திரு­மணம் சில தட­வைகள் பிற்­போ­டப்­பட்­டது. இப்­போது என்­னு­டைய திரு­மண நாளி­லேயே அவர்­களும் திரு­மண பந்தத்தில் இணைந்து கொண்­டுள்­ளனர்.

எனது பேரன்­களுடன் இணைந்து எனது திரு­மணம் நடந்­த­மை­யினால் நான் மிகவும் மகிழ்ச்­சி­யாக இருக்­கின்றேன். மேலும் தற்­போது மீண்டும் எனது 20ஆவது வய­திற்கு திரும்­பி­யது போல உண­ரு­கின்றேன் என்றார்.

இத்திருமணத்தின் போது உள்ளூரைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் பழங்குடியின முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Filed in: இது எப்படி இருக்கு?, உலகம், கொறிக்க...

No comments yet.

Leave a Reply

You must be logged in to post a comment.