மாற்றுத்திறனாளி

0

002கண் தெரியாதவர் – நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..

காது கேளாதவர் – நான் ஒட்டு கேட்டதே கிடையாது…

வாய் பேசாதவர் – நான் பொய் பேசியதே கிடையாது..

குள்ளமானவர் – நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..

கை இல்லாதவர் – நான் யார்
குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..

கால் இல்லாதவர் – நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை…

அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்.. நீயோ ஊனம் என்கிறாய்..

எங்களால் செய்ய இயலாத செயல்கள் செய்யும் நீ தான் ஊ –!! அந்த வார்த்தையை உபயோகிக்க மாட்டேன் ஏனென்றால் அந்த வார்த்தையின் வலி எனக்கு தெரியும் !

Leave a Reply