ஒருவருக்கொருவர் இரத்தத்தை பரிமாறிக்கொள்ளும் விநோத தம்பதி

0

blood-familyஅமெ­ரிக்­காவை சேர்ந்த ஒரு தம்­பதி வாரத்­திற்கு ஒரு­முறை தங்­க­ளது இரத்­தத்தை தங்­க­ளது ஜோடி­யுடன் பரி­மா­றிக்­கொள்­வதை ஒரு வழக்­க­மாக கொண்­டுள்­ளமை வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்­தவர் அரோ டிராவென். 38 வய­தான இவர் திரு­மணம் முடித்து 5 குழந்­தை­களின் தந்­தை­யானவர், அண்­மையில் ஒரு சமூக இணை­ய­தளம் மூலம் லியா பெனின்காப் என்னும் 20 வயது பெண்ணை சந்­தித்­துள்ளார்.

இவர்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட நட்பு காலப்­போக்கில் காத­லாக மாறி­யது. இந்­நி­லையில், தங்­க­ளது உறவை அடுத்த கட்­ட­திற்கு கொண்டு செல்ல நினைத்த இவர்கள், ஒரு­வரின் இரத்­தத்தை மற்­றொ­ருவர் குடிக்க தொடங்­கினர். இவர்கள் இரு­வரும் தங்­க­ளது இரத்­தத்தை ஒரு­வ­ருக்கு ஒருவர் மாற்றி குடிப்­பது மகிழ்ச்சி அளிப்­ப­தாக தெரி­வித்­துள்­ளனர்.

வாரத்தில் ஒரு முறை­யா­வது இது­போன்று இரத்­தத்தை பரி­மா­றிக்­கொள்ளும் இவர்கள், விரைவில் திரு­மணம் செய்­துக்­கொள்ள இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளனர்.

இது­தொ­டர்­பாக தெரி­வித்த இந்த தம்­பதி, இது­போன்று இரத்தம் குடிப்­பது எங்கள் இரு­வ­ரது நட்­பையும் மிகவும் நெருக்­க­மாக்­கு­கி­றது. வாரத்திற்கு ஒரு முறையாவது இப்படி செய்வதை நாங்கள் வழக்கமாக கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

Leave a Reply