சொல்பவன் யாரென்றுதான் இந்த உலகம் பார்க்கிறது

0

kannadashanகவியரசர் கண்ணதாசன் ஒரு கல்லூரியில் கவி அரங்கம் ஒன்றில் கலந்து கொண்டார்.அவர் கவிதை வாசிக்க எழுந்ததுமே, பெருத்த உற்சாக ஆரவாரம் எழுந்தது.

ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல், வாசித்து முடிந்து வெகுநேரம் வரை கரவொலிகள். அவை ஓய்ந்ததும் கண்ணதாசன் கூறினார்,“இதுவரை நான் வாசித்தது என் கவிதையே அல்ல. நான் எழுதிய கவிதையை என் மாணவருக்குக் கொடுத்து விட்டேன். அவரது கவிதையை வாங்க நான் வாசிக்கும்போது நீங்கள் வரிக்கு வரி கை தட்டினீர்கள்.

ஆகவே சொல்பவன் யாரென்றுதான் இந்த உலகம் பார்கிறதே தவிர சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை” என்றார்.

Leave a Reply