கங்ணம் ஸ்டைல் பாடகரின் போலி குதிரை சவாரி

0

ganganam-songதென்­கொ­ரிய பாட­க­ரான ஷையின் “கங்ணம் ஸ்டைல்” பாடல் உல­க­ளா­விய ரீதியில் பிர­சித்தி பெற்­ற­மைக்கு அப்­பா­டலில் ஷை ஆடிய “குதிரை நடனம்” முக்­கிய காரணம்.

இப்­போது அவர் குதி­ரை­யொன்றில் பய­ணிப்­ப­துபோல் விளம்­ப­ர­மொன்று தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­ளம்­பரப் படப்­பி­டிப்பு அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்­மையில் நடை­பெற்­றது.

ஆனால், கங்ணம் ஸ்டைலில் பாடலில் குதிரை போன்று நட­னமா­டிய பாடகர் ஷை, இவ்­வி­ளம்­பரப் படப்­பி­டிப்பில் உண்­மை­யான குதி­ரைக்குப் பதி­லாக போலி குதி­ரை­யொன்றில் அமர்ந்­தி­ருந்த நிலை­யி­லேயே படப்­பி­டிப்பு நடத்­தப்­பட்­டது.

35 வய­தான பாடகர் ஷையின் உண்­மை­யான பெயர் பார்க் ஜே சாங் ஆகும். பல வரு­டங்­க­ளாக அவர் தென் கொரி­யாவில் பிர­ப­ல­மான பாட­க­ராக விளங்­கு­கிறார். ஆனால் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் வெளி­யிட்ட கங்ணம் ஸ்டைல் பாடல் உலகம் முழு­வதும் அவரின் புகழை பரவச் செய்­தது.

அந்த பாடல் யூரியூப் இணை­யத்­த­ளத்தில் வெளி­யா­ன­வுடன் ஒரே நாளில் உலகப் புகழ்­பெற்ற நட்­சத்­தி­ர­மானார் ஷை. அப் பாடல் வீடியோ யூரியூப் இணை­யத்­த­ளத்தில் 170 கோடிக்கும் அதி­க­மான தடவை பார்­வை­யி­டப்­பட்டு சாதனை படைத்­துள்­ளது.

கடந்த ஏப்ரல் மாதம் “ஜென்­டில்மேன்” என புதிய பாடல் ஒன்­றையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இணை­யத்­த­ளங்­களில் அதி­க­மாக பார்­வை­யி­டப்­பட்ட வீடியோ, அதி­க­மாக “லைக்” செய்­யப்­பட்ட வீடியோ, யூரியூப் இணை­யத்­த­ளத்தில் 100 கோடி தடவை பார்­வை­யி­டப்­பட்ட முதல் வீடியோ, 24 மணித்­தி­யா­லங்­களில் அதி­க­மாக பார்­வை­யி­டப்­பட்ட வீடியோ என பல சாத­னை­களை “கங்ணம் ஸ்டைல்” வீடியோ படைத்­தது.

மேற்­கு­லக இசைத் தொழிற்­து­றையில் வர்த்­தக ரீதியில் வெற்றி பெற்ற முதல் கொரிய பொப் கலைஞராக பாடகர் ஷை விளங்குகிறார். ஆனால், எதிர்காலத்தில் இன்னும் பல “ஷை” களை கொரிய பொப் கலைத்துறை உருவாக்கும் என்கிறார் ஷை.

Leave a Reply