விற்பனைக்கு வரும் 70 இலட்சம் பெறுமதியான 24 கரட் தங்கக் காலணி

0

goldஅல்­பேர்டோ மொரெட்டி என்ற இத்­தா­லியைச் சேர்ந்த நிறு­வ­ன­மொன்று 24 கரட் தங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்ட வெல்வட் காலணி ஒன்­றினை உல­க­ளவில் விற்­ப­னைக்­காக அறி­முகம் செய்­து­வைத்­துள்­ளது.

தனித்­து­வ­மான இந்த கால­ணியை மேற்­படி நிறு­வனம் ஹொரோ எனும் காலணி உற்­பத்தி நிறு­வ­னத்துடன் இணைந்து உரு­வாக்­கி­யுள்­ளது. உலகில் மனி­தர்கள் அணி­யக்­கூ­டிய வகையில் தயா­ரிக்­கப்­பட்ட முதல் 24 கரட் தங்கக் காலணி இது­வெனக் கூறப்­ப­டு­கி­றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் அணி­யக்­கூ­டி­ய­வாறு பிரத்­தி­யே­க­மாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள இந்த தங்கக் கால­ணியை கடந்த மே மாதம் 25ஆம் திகதி நடை­பெற்ற மொன்ரி கார்லோ க்ரான் ப்ரிக்ஸ் எப் 1 கார் ரேஸ் போட்­டி­களின் போது அறி­முகம் செய்­து­வைத்­துள்­ளது.

இலங்கை மதிப்பில் சுமார் 70 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இந்த தங்கக் கால­ணி பானீஸ் நியூயோர்க், ப்ரட் ஸீகல் லொஸ்­ஏஞ்சல்ஸ், த ஸ்வாங் ஹொங்கொங், லெவல் சூ டிஸ்ட்ரிக் டுபாய் போன்ற உயர்ரக பல்பொருள் சந்தையில் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Leave a Reply