ஜாலி வயசு…

0

வகுப்பில் ஒரு மாணவன் இருந்தான். ஜாலி என்ற பேரில் உலகில் உள்ள அத்தனை கெட்ட பழக்கங்களையும் கற்று வைத்திருந்தான். அவனது கெட்ட பழக்கங்களை யாராவது சுட்டிக் காட்டினால், அவன் சொல்லும் பதில் இதுதான்.

இந்த வயசுலதான் இப்படிலாம் இருக்க முடியும். அப்புறம் மாறிடலாம்! இவனுடைய இந்தப் பழக்கங்களைக் கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர் ஒருவர் அவனை அழைத்தார்.

தம்பி, என் கூட வா. உனக்குக் கொஞ்சம் வேலை வைத்திருக்கிறேன் என்றார். மாணவன் அவருடன் சென்றான்.

அங்கே தோட்டத்தில் ஒரு சிறு செடியைக் காட்டினார்.

தம்பி இந்தச் செடியைக் கொஞ்சம் பிடுங்கிப் போடு என்றார் போடு என்றார் பேராசிரியர்.

தயக்கமே இல்லாமல் மாணவன் சட்டென்று பிடுங்கிவிட்டான்.

அடுத்து அதைவிட சற்று பெரிய செடியைக் காட்டி பிடுங்கச் சொன்னார். அதையும் அவன் எளிதில் பிடுங்கிவிட்டான்.

அதற்கடுத்து அதைவிடப் பெரிய செடி. இந்த முறை சற்று சிரமப்பட்டு பிடுங்கினான் மாணவன்.

கடைசியாக ஒரு மரத்தைக் காட்டி தம்பி, இதையும் கொஞ்சம் பிடுங்கிப் போட்டுடுப்பா என்றார்.

மாணவன் திகைத்தான்.

என்ன சார், விளையாடறீங்களா? இவ்வளவு வளர்ந்த மரத்தை எப்படிப் பிடுங்குவது?

அதற்கு பேராசிரியர் சொன்னார். உன்னிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களும் அப்படித்தான். வளர்ந்துவிட்டால் பிடுங்க வராது. நீ தான் கஷ்டப்பட வேண்டும்.

பேராசிரியரின் விளக்கம் மாணவனுக்குப் புரிந்தது.

Leave a Reply