திருமணம் ஆன உடனேயே கருக்கொள்ளலாமா?

0
Mother heart disease will baby affected

பச்சிளம் குழந்தைகூட இதய நோயுடன் பிறப்பது உண்டு. எனவே பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தை காத்தல் அவசியம். பொதுவாக திருமணம் ஆன உடன் கருக்கொள்வது இயல்பிலேயே நிகழக்கூடியது. அந்த நாட்களில் பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக பெண்கள் முகக்கிரீம்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

பருவ வயதில் ஏற்படும் பருக்களையும், இப்பருக்களால் உண்டாகும் தழும்புகளை நீக்கவும் இளம்பெண்கள் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். இவற்றை நீக்க ஒருவகை அமிலம் கலந்த முகக்கிரீம்களை பயன்படுத்துவது வழக்கம். இந்த கிரீம்கள் அபாயத்தை வரவழைக்கின்றன. இவை கருவில் சிசுவின் இதயத்தை பாதிக்கின்றன. திருமணத்திற்கு முன்னர் இவற்றை பயன்படுத்துவதால் ஆபத்து இல்லை. கருத்தரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்கு மேலும் சில காரணங்கள் உண்டு. தாய்க்கு பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். தாய்க்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால், அது கருவிலேயே சிசுவை பாதிக்கும். தந்தைக்கு பிறவி இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இதயம் பாதிக்கப்படலாம். கருவில் குழந்தை உருவாகும் முறை குறித்து அறிந்தால் இப்பாதிப்பு ஏற்படும் நிலையை அறிந்துகொள்ளலாம். ஒரு தாய் தாய்மையை உணர்வதற்கு முன்னர் கர்ப்பப்பையில் கரு ஓர் இடத்தை பிடித்துவிடும்.

சிசுவின் உடல் பாகங்களில் முதலில் உருவாவது இதயமே. இந்த இதயம் எட்டு வாரத்திற்குள் முழுமையாக உருவாகிவிடும். இரண்டு குழாயாக மட்டும் உருவாகும் இதயமானது இணைந்து மடங்கி, இதயத்தின் வடிவை பெற்றுவிடும். இந்த எட்டு வாரங்களில் கரு உருவானது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம். முதல் எட்டு வாரங்கள் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். தனக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்போது மருந்து மாத்திரை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால், கருவிலுள்ள சிசுவுக்கு இதய ஓட்டை ஏற்பட்டுவிடாமல் காக்கலாம்.

Leave a Reply