தாம்பத்திய ஆசையை அதிகரிக்கும் வெந்தயம்..!

0

ஒரு மனிதனுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று தாம்பத்தியம் வைத்துக் கொள்ளும் அந்த அற்புத நேரம். இந்த நேரத்தில் தேவையில்லாத சத்தமோ அல்லது தொல்லைகளோ வந்தால், அப்போது, மனம் எரிமலையாகிவிடும். இதிலிருந்தே செக்ஸ் மீது உள்ள ஈர்ப்பு புலப்படும்.

மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கைக்கு பலம் கூட்டவும், ஏகப்பட்ட மருந்துகள் பல மெடிக்கல் ஷாப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் எல்லாம் கெமிக்கல் பொருட்களால் தயாரிக்கப்பட்டது மட்டுமின்றி பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

ஆனால், இயற்கையான முறையில் நாம் முன்பு தினமும் உணவில் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் பக்க விளைவுகள் இன்றி செக்ஸ் உணர்வை அதிகரிக்கின்றது என்றால் நம்ம முடிகின்றதா ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். அந்தப் பொருளின் பெயர் வெந்தயம்.

இந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று வெந்தயம். அதனால் தான், நமது முன்னோர்கள், நமது உணவுப் பொருட்களில் வெந்தயத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். வெந்தயம், ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை தூண்ட உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள சபோனின் எனப்படும் பொருள், ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரனை தூண்டும் சக்தி கொண்டது.

வெந்தயத்திற்கு, செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக வெளிநாட்டு ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 55 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வு செய்த போது, அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயச் சாறு கொடுத்து, கண்காணிக்கப்பட்ட போது, ஆறு வார காலத்திற்குப் பின்பு, அவர்களது செக்ஸ் உணர்வுகள் பல மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. வெந்தயம் சாப்பிடாத சிலரை அதே போல் ஆய்வுக்குட்படுத்திய போது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் குறைவாகவே இருந்துள்ளது.

செக்ஸ் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது வெந்தயம். எனவே, இனி பணம், காசு செலவு பண்ணி கண்ட கண்ட மருந்துக்களை வாங்கி உயயோகப்படுத்தாமல், நமது உணவில் அடிக்கடி வெந்தயத்தை சேர்த்துக் கொண்டாலே நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply