சொட்டை தலையில் முடி வளர சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்க..!

0

1) சொட்டை தலையில் முடி வளர சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் அரை மணி நேரம் ஊற சீயக்காய் தூள் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு ஒன்று விட்டு ஒருநாள் செய்து வந்தால் முடி நன்கு வளரும்.

2) நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தேய்த்து பத்து நிமிடம் ஊற வைத்து குளித்து வர முடி பொலிவு பெரும்.

3) கருவேப்பிலை இலைகளை அலசி நிழலில் உலர்த்தி அரைத்து பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி தலையில் தினமும் தேய்த்து வரவும். அல்லது இரவில் தேய்த்துவிட்டு காலையில் குளித்து விடலாம். இதனால் தலைமுடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளரும்.

4) டை அலர்ஜி உள்ளவர்கள் மருதாணி இலைகளை நிழலில் உலர்த்தி அரைத்து பொடி செய்து அதனை டீ தூள் கொதிக்க வைத்த நீரில் மருதாணி பொடியை கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.

5) நெல்லிக்காயை காய வைத்து பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.

6) செம்பருத்தி இலைகளை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் முடி பட்டு போல் பளபளப்புடனும், மிருதுவாகவும் காணப்படும்.

7) வாரம் ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. தலை முடியை அதிகம் காய விடாமல் அவ்வபோது தேங்காய் எண்ணெயை வைத்து கொள்வது பொடுகு வராமல் காக்கும்.

8) தயிரில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிப்பதால் நாளடைவில் பொடுகு பிரச்சனை தீரும்.

Leave a Reply