வெற்றிடம் நிரப்புக

0

வீரத்தின்
விளைநிலத்தில்
மரணங்களின் தொகை
மங்காவடுவாய்….

சோகங்களும்
துயரங்களும்
உடன்பிறப்புகளாய்….

காக்கை வன்னியனின்
வெற்றிடத்தை நிரப்ப
“காக்க” வன்னியரென
அன்னியரின்
அரவணைப்பில்
இவர்கள்

சோகத்தின்
விளைநிலத்தை
சுந்தரகாண்டமாக்கி
மக்களை
அரவணைக்க
அவர்கள்

நாமெல்லாம்
சிங்கத்தின்
கோட்டைக்குள்
சிக்குண்ட மான்களாய்
பண்டார வன்னியனின்
வரவை எதிர்பார்தபடியே…..

வவுனியன்-

Leave a Reply