4:40 pm - Friday May 25, 2018

எதை மறப்பது?

என்காதலி இறந்தாள்
அழுதேன்…
விம்மி….விம்மி…. அழுதேன்

என் தங்கை மறைந்தாள்
நனைந்தேன்…..
கண்ணீரால் நனைந்தேன்

“நீ பிறந்த மண் உனக்கு
சொந்தமில்லை
மறந்துவிடு பிறந்த மண்ணை”
என்றார்கள்
சிரித்தேன்….
தொடர்ந்து சிரித்தேன்
மனநோயாளியாய்…..

மண்ணையும் மக்களையும்
மறந்துவிட வேண்டும்
இல்லையேல் – நீ
மண்ணுள் மறைந்து விடுவாய்….

தேடினார்கள் – எனை
தினம் தினம் தேடினார்கள்
ஆயுதம் தரித்த
அரக்க படையினர்

நான் பிறந்த மண்
எனக்குச் சொந்தமில்லையாம்….
“மறந்துவிடு பிறந்தமண்ணை”
எனகி;றார்கள்…..
எதை மறப்பது
சின்ன வயதில்
சிவகாமிக்கு அடிப்பதற்காகவே

கிளியாய் அவதாரமெடுத்து
கிளிக்கோடு மறித்த
புழுதி மண்ணையா….?

குஞ்சு வயதில்
கோயில் திருவிழாவுக்காய்
உண்டியலில்
சதம் சதமாய் சேர்த்த பணம்
சனக்கும்பலில் தொலைந்துவிட – நான்
கண்ணீரோடு அதைத்தேட
அயல் வீட்டு
அபிராமி
அம்மம்மாக்குழலை-என்
காதுக்குள் ஊதியதையா….
எதை மறப்பது…..?

கல்லூரில் ஆய்வுக்காய்
தவளை வெட்டச் சென்ற நாங்கள்
தவளை வெட்டுமுன்
மாணவர்களின்
தலையெடுத்த எறிகணையையா…..?
எதை மறப்பது…..?

ரமேஷ் வவுனியன்.

Filed in: தேடல்

No comments yet.

Leave a Reply

You must be logged in to post a comment.