கலரைச் சொல்லுங்கள்! காதலைச் சொல்கிறோம்! கலர்ஃபுல் சைக்காலஜி

2

நீங்கள் காதலில் கில்லாடியாக இருக்கலாம். எல்லோரையும் வசியப்படுத்தும் கலையும் தெரிந்திருக்கலாம். ஆனால் அந்தரங்க விஷயத்தில் நீங்கள் எப்படிப்பட்ட பர்ஸனாலிட்டி என உங்களுக்கு தெரியுமா? உங்கள் செக்ஸூவல் பர்ஸனாலிட்டியைத் தெரிந்துகொள்ள இதோ லேட்டஸ்ட்டான கலர் சைக்காலஜி.

உங்களுக்கு பிடித்த நிறத்தைக் குறிப்பிடுங்கள். உங்கள் அந்தரங்க பர்ஸனாலிட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

சிவப்பு:

அந்தரங்க விஷயத்தில் நீங்கள் புலி. கற்பனையில் தோன்றுவதை மிகச் சுலபமாக சாதித்து விடுவீர்கள். உங்களுக்கு ஆர்வம் மட்டும் வந்துவிட்டால் அவ்வளவு தான். சுலபமாக அந்த ஆர்வத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. உங்கள் ஜோடியும் சிவப்பு நிற ப்ரியராக இருந்துவிட்டால் உங்களுக்கு கொண்டாட்டம் தான் ஜமாய்த்து விடுவீர்கள்

மஞ்சள்:

உங்களது அந்தரங்க ஆசைகள் கொஞ்சம் சிக்கலான சமாச்சாரமாக இருக்கும். முயற்சி செய்தால் அதை எளிதில் அடைந்துவிடலாம். உங்களை விட உங்கள் பார்ட்னர் அந்த விஷயத்தில் கில்லாடியாக இருந்தால் அவர்கள் வழியிலேயே போய் அமர்க்களப்படுத்துவீர்கள். அந்தரங்கமான சமாச்சாரங்களில் உங்களால் முழுமையாக கொண்டாட முடியாமல் போனாலும் கவலைப் பட மாட்டீர்கள்.

பிங்க்:

பிங்க் நிறத்தை விரும்பும் ஆண்கள் தாராளமான மனம் படைத்தவர்கள். காதல் சேட்டைகளில் வஞ்சகம் வைக்காதவர்கள். ஒரே நாளில் ஒரே நேரத்தில் நாலைந்து சந்திப்புகளுக்கு ஒ.கே. சொல்லிவிட்டு, ஒன்றைக் கூட கவனிக்காமல் விட்டுவிடுவீர்கள். பிங்க் நிறப் பெண் பிரியைகள் தங்களது பெண்மையைக் கொண்டாடுவதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். காரணம் ஆண்களை உங்களுக்கு அதிகம் பிடிக்காது.

பர்ப்பிள்:

பர்ப்பிள் நிற பிரியர்களுக்கு, அவர்களுடைய சந்தோஷம், உணர்வுகள் மட்டுமே முக்கியமானதாக இருக்கும். உங்களது ஜோடியின் திருப்தியை விட உங்களுடைய முழு திருப்தி மட்டுமே தான் முக்கியம். பர்ப்பிள் நிற ஆண் பிரியர்கள் அந்த விஷயங்களில் கூட பிஸினெஸைக் கையாள்வது போலதான் நடந்து கொள்வீர்கள்.

கருப்பு:

நீங்கள் சரியான மூடி பேர்வழி. ஏதாவது நெருக்கடிகள் இருக்கும் போதோ, அல்லது வருத்தமான சூழ்நிலையில் இருக்கும்போதோ, நீங்கள் அதுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்களது அணுகுமுறையில் கொஞ்சம் முரட்டுத்தனமும், பிடிவாதமும் மறைந்து இருக்கும். ஏடாகூடமாகச் செயல்பட விரும்புவீர்கள்.

பச்சை:

அந்தரங்க விஷயத்தில் நீங்கள் ஃப்ரெஷ்ஷராகவும் வெகுளித்தனமாகவும் கையாள்வீர்கள். பச்சை நிறத்தை விரும்பும் பெண்கள் தங்களது வாழ்க்கை முழுவதும் தேவதைகளைப் போலவே காதலை மதிப்பீர்கள். ஆண்கள் கொஞ்சம் குழப்பமாகவும் ஏடாகூடமான ஆட்களாக இருந்தாலும் அந்த விஷயத்தில் வசிகரமான வழியில் போவீர்கள்.

ஆரஞ்சு:

செக்ஸூவல் ஃபேண்டஸி சமாச்சாரங்களில் நீங்கள் கொஞ்சம் சாதாரண ரகம் தான். உங்களைப் பொறுத்தவரை அந்தரங்கமான விஷயமும் கூட உங்களுக்கு ஒரு நாடகம் மாதிரி தான். அதில் நீங்கள் தான் ஆல்இன்ஆல் ஆக இருக்க விரும்புவீர்கள்., கொஞ்சுவதில் நீங்கள் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். தேவையில்லாமல் ஏதாவது அர்த்தமில்லாத டயலாக்குகளை விடுவதை உங்களது இமெஜ் என நினைத்துக் கொள்வீர்கள். ஆரஞ்சு நிற பிரியர்களுக்கு நெருக்கமான உறவில் அதிக நாட்டம் இருக்காது.

நீலம்:

நீலநிறப் பிரியர்கள் அந்தரங்கத்தில் அருமையான பார்ட்னர்களாக இருப்பார்கள். தங்களுடை பார்ட்னர்கள் விரும்புவதை அன்போடும் உணர்ச்சிபூர்வமாகவும் செய்து முடிப்பதில் நீங்கள் சாமர்த்திசாலி. அந்தரங்க விஷயங்களை ஒரு நுண்கலை போல நினைத்து அதை நுணுக்கத்தோடு கையாள நினைப்பீர்கள். ஆண்கள் பியானோ வாசிப்பவரைப் போல நளினமாகவும், பெண்கள் அந்த விஷயத்தில் முழுமையாகவும் கொண்டாடுவீர்கள்.

வெள்ளை:

உங்களுக்கு அந்த மாதிரியான விஷயங்களும் கூட இரண்டாம் பட்சம் தான். படங்களில் காட்டும் ஃப்ரென்ச் முத்தம் கூட உங்களுக்கு ஆபாசமான காட்சியாகத் தெரியும். பெண்கள் இந்த விஷயத்தில் அதிக கூச்சமுள்ளவர்களாக இருப்பீர்கள்.

Leave a Reply