நடைபிணம்

0

தாயைக்கண்டும்
தாய்நாட்டைக் காணாத
தவப்புதல்வன் நான்….

நாடின்றி
நாதியற்று வீதியில்
அலைவதை விட
இறப்பதே மேலென
இறப்பதற்கு ஏற்ற நாடு தேடி
அகதியாய் நான்…..

ஜேர்மனியில் இயலாது…
கிட்லரின் வீழ்ச்சிக்குப்பின்
கிழர்ந்தெழுந்த மானுடம்
ஐப்பானை எட்டிப்பிடிக்க
தொழில் நுட்பத்தில்
புத்துயிர் பெற்றதையிட்டு – நான்
ஆராய வேண்டும்.

இத்தாலியில் இயலாது…
சாய்ந்த கோபுரம்
சிதறாமலிருக்கும்
சிரமத்தையெண்ணி – நான்
சிந்திக்க வேண்டும்

ரஷ்யாவில் இயலாது…
அக்ரோபர் புரட்சிக்கு
அத்திவாரமிட்ட
அறிஞர்களின் ஆத்மாக்களுக்கு – நான்
அஞ்சலி செலுத்திக்கொண்டே
இருக்க வேண்டும்
தாயைக்கண்டும்
தாய்நாட்டைக் காணாத
தவப்புதல்வன் நான்….

நாடின்றி
நாதியற்று வீதியில்
அலைவதை விட
இறப்பதே மேலென
இறப்பதற்கு ஏற்ற நாடு தேடி
அகதியாய் நான்…..

ஜேர்மனியில் இயலாது…
கிட்லரின் வீழ்ச்சிக்குப்பின்
கிழர்ந்தெழுந்த மானுடம்
ஐப்பானை எட்டிப்பிடிக்க
தொழில் நுட்பத்தில்
புத்துயிர் பெற்றதையிட்டு – நான்
ஆராய வேண்டும்.

இத்தாலியில் இயலாது…
சாய்ந்த கோபுரம்
சிதறாமலிருக்கும்
சிரமத்தையெண்ணி – நான்
சிந்திக்க வேண்டும்.

ரஷ்யாவில் இயலாது…
அக்ரோபர் புரட்சிக்கு
அத்திவாரமிட்ட
அறிஞர்களின் ஆத்மாக்களுக்கு – நான்
அஞ்சலி செலுத்திக்கொண்டே
இருக்க வேண்டும்.

ரமேஷ் வவுனியன்.

Leave a Reply