ஐம்பதிலும் காதல் வரும்…

0

மனித வாழ்க்கையில் மிக மிக அழகான விஷயங்களுள் ஒன்று காதல். அழகான மனம் இருந்தால் போதும். அழகான ரசனை இருந்தால் போதும். காதல் தானாக வந்து எட்டிப் பார்த்து விடும்.

பஞ்சையும், தீக்குச்சியையும் அருகருகே வைக்கக்கூடாது என்பார்கள். அவை அருகில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தீப்பற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படலாம். அது போன்று, இரு மனங்கள் மோதி விபத்துக்குள்ளாவதால் ஏற்படும் பாதிப்பு தான் காதல்.

பதினெட்டு வயதில் தான் ஒருவருக்கு காதல் வரவேண்டும் என்று கிடையாது. ஐம் பதிலும் காதல் வரலாம். ஏன் நூறு வயதை கடந்தாலும் அங்கே ஆத்மார்த்தமான, அனு பவப்பூர்வமான உண்மையான காதலை-பாசத்தை நாம் பார்க்கலாம்.

சில தம்பதியரை பார்த்தால் அவர்களது உண்மையான வயதை எளிதில் மதிப்பிட்டுவிட முடியாது. அந்த அளவுக்கு இளமையாக இருப்பார்கள். இன்னும் சில தம்பதியர் இருக் கிறார்கள். வயது குறைவாகத் தான் இருக்கும். ஆனால் தோற்றத்தில் ஐம்பதை கடந் தவர்கள் போல் தோன்றுவார்கள். ஏன் பிறந்தோம் என்பதுபோல் அவர்களது முகபாவ னைகள் இருக்கும்.

இந்த வேறுபாடுகளுக்கு காரணம் என்ன?

எல்லாம் மனம் தான்.

நான் இளமையாக இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன் என்று உங்கள் மனம் எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால் நீங்கள் இளமை யாக-சந்தோஷமாகத் தான் எப் போதும் இருப்பீர்கள். என்ன வாழ்க்கை இது? எதைச் செய் தாலும் நேர்எதிராகி விடுகிறதே என்று எண்ணினால் அதுவே உங்கள் வயதைக் கூட்டிக்காட்டும் அளவுக்கு உங்களுக்குள் சீக்கிரம் முதுமையை விதைத்துவிடும்.

உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி தான் நீங்கள் நடந்து கொள்வீர்கள். உங் கள் மனம் ஆரோக்கியமாக இருந்தால் நீங்களும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். மனதிற்கு ஒரு நோய் என்றால் அது உங்களுக்கும் தான்.

அன்பை வெளிப்படுத்த வயது ஒரு தடையே அல்ல. ஐந்து வயது குழந்தையிடம் நாம் வெளிப்படுத்தும் எதிர்பார்ப்பற்ற அன்புக்கும், பதினெட்டு வயதில் வெளிப்படுத்தும் இனம் புரியாத அன்புக்கும், ஐம்பது வயதில் ஆதரவான அரவணைப்பை தேடும் அன்புக்கும் வித்தியாசங்கள் இருந்தாலும் எண்ணங்கள் ஒன்று தான்.

அன்பை பரிமாறிக்கொள்ள வயது ஒரு தடையே கிடையாது. இளம் தம்பதியர் ஒரு வருக்கொருவர் பாசத்தை பொழிவது ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும். இந்த அதிக பட்ச அன்பின் வெளிப்பாடு காலப்போக்கில் குறையத் தொடங்கலாம்.

இதைத்தான் `ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்’ என்கிறார்கள். இந்த கால கட்டத்தில் மனைவி என்ன சொன்னாலும் கணவன் கேட்பான். மனைவியும் உயிரில் உரு குவாள். இல்லற வாழ்க்கை பற்றி கனவு கண்ட அவர்கள் மனம், அப்போது அதை அடைந்து விட்ட உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும்.

எல்லோரையும் இப்படிப்பட்டவர்கள் தான் என்று சொல்லிவிட முடியாது. இளம் வய திலேயே அனுபவ அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் எப்போதும் நிதானம் தவறி போய்விட மாட்டார்கள்.

இல்லற வாழ்வின் ஆரம்பத்தில் இனிக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் காலங்கள் நகர, நகர கசக்கத் தொடங்கிவிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. காரணம், அப்போது அன்புக்கு பற்றாக்குறை ஏற்படுவது தான்.

மனைவி வந்த புதிதில் அவளுக்கு அடிக்கடி மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்து அசத்து பவர்கள், குழந்தைகள் பிறந்து ஆளான பிறகு, மல்லிகைப் பூவையே மறந்து விடு கிறார்கள். தெருவில் செல்லும்போது, `பூ வாங்கலீயா… பூ’ என பூவியாபாரி கூவும் குரல் காதில் விழும்போதுதான் மலரும் நினைவுகளாக இளமைக்காலம் சற்று கண்முன் நிழ லாடிவிட்டு மறையும்.

`அன்று அப்படி இருந்த நானா, இன்று இப்படி மாறிவிட்டேன்’ என்ற ஆச்சரியம் கொஞ்சம் வெட்கத்தோடு தலைதூக்கிப் பார்க்கும். யோசிக்கக் கூட அவர்களுக்கு அப்போது நேரம் இருக்காது. காரணம், இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் `பரபர’ வாழ்க்கை தான்.

நீங்களும் ஐம்பது வயதிலும் மன அளவில் இளமையாய் இருக்கலாம். அதற்காக, ஒவ் வொரு மனைவியரும் தங்கள் கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்கே பார்ப்போம் :

உங்கள் கணவர் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்றாலும் சரி, சுயதொழில் செய்பவர் என்றாலும் சரி எப்படியும் டென்ஷன் இருக்கும். செய்யும் தொழிலை பொறுத்து டென்ஷன் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கலாம். அதை வீட்டிலும் அவர் வெளிப்படுத்தலாம். அதனால், முடிந்தவரை வீட்டில் கணவருக்கு டென்ஷன் ஏற்படாதவாறு பார்த்துக் கொள் ளுங்கள். அவர் டென்ஷனோடு வந்தால் அதை குறைக்கும் வகையில் இதமாக பேசுங்கள். ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லுங்கள். டென்ஷனின் வேகம் தணியும். பிரச்சினைகளுக்கு தீர்வும் கிடைக்கும்.

சில பெண்கள் 40 வயதை தாண் டினாலே எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணிவிடுகிறார்கள். ஆடை விஷயத்திலும் அலங் காரத்தை தவிர்த்து எளிமைக்கு மாறிவிடுகிறார்கள். இந்த தோற் றத்தில் உங்களை உங்களவர் பார்க்கும்போது, `நமது மனைவிக்கு வயது ஆகிவிட்டதோ’ என்று தான் தோன்றும். `ஆள் பாதி, ஆடை மீதி’ என்பதை எல்லா பெண்களும் கவ னத்தில் கொள்ள வேண்டும். முடிந்தவரை, இளமையான தோற் றத்தை தரக்கூடிய ஆடைகளையே அணியுங்கள். அதற்காக, `காஸ்ட்லி’யான ஆடை தான் அணிய வேண்டும் என்பது இல்லை. சிம்பிளான ஆடையிலும்கூட நீங்கள் தேவதையாக மின்னலாம். எல்லாம் உங்கள் பக்குவம் தான். அந்த பக்குவத்தோடு நீங்கள் ஆடை அணிந்தால் கணவரை எளிதில் உங்கள் வசப்படுத்தலாம். திருமணம் ஆன புதிதில் எப்படியெல்லாம் உங்களை வர்ணித்தாரோ, அதே அளவுக்கு இல்லா விட்டாலும் ஏறக்குறைய அதை நெருங்கும் அளவுக்கு உங்களவர் உங்களை வர்ணித்து மகிழ்ச்சிப்படுத்துவார்.

யாராக இருந்தாலும் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும். இரவில் படுக்கைக்கு செல்லும்போது அதுபற்றி மூச்சு விட்டுவிடாதீர்கள். படுக்கத் தயாராகும் முன் மனதை அமைதிப்படுத்துவது அவசியம். அதனால் படுக்கையறையில் கணவர் முன்பு பிரச்சினைகளை கொட்டாமல் இருப்பது தான் நல்லது.

உங்கள் கணவர் பிறந்த நாள், உங்கள் திருமண நாள் போன்றவற்றை உங்கள் கணவர் மறந்திருந்தாலும், அதை சஸ்பென்சாக வைத்து, அந்த நாளில் அவருக்கு ஆச்சரியத்தக்க பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுங்கள். உங்கள் கணவர் விரும்பும் பரிசாக அது இருந்தால் இன்னும் நல்லது.

உங்கள் கணவரது பெற்றோர், அதாவது உங்கள் மாமனார்-மாமியார் உங்களுடன் வசித் தால், அவர்களை அடுத்தவரது பெற்றோர் என்று எண்ணாமல் உங்கள் பெற்றோர் போலவே எண்ணிப் பாருங்கள், உபசரியுங்கள். இதை பார்க்கும் உங்கள் கணவர், என் மனைவி போல் எந்த பெண்ணும் இருக்க மாட்டாள் என்று புளகாங்கிதம் கொள்வார்.

பசி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் என்பார்கள். அப்படிப்பட்ட பசியை போக்குவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பசியோடு வரும் கணவனுக்கு, அவரது வாய்க்கு ருசியாக, விதவிதமாக உணவு வகைகளை தயார் செய்து பரிமாறுவது கணவர் மனதில் உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்யும்.

எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். உங்கள் கணவர் என்னென்ன எதிர்பார்க்கிறாரோ, அவற்றை எல்லாம் தெரிந்து, முடிந்தவரை அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி செய் யுங்கள். நீங்கள் அவரை எல்லா செயல்களாலும் மகிழ்ச்சிப்படுத்தும்போது, அவர் நிச்சயம் உங்களையும் மகிழ்ச்சிப்படுத்துவார்.

– இப்படியெல்லாம் நீங்கள் இருந்தால், உங்களவர் உங்களை பார்த்து 50 வயது ஆனா லும் `ஐ லவ் ï’

சொல்லத் தானே செய்வார்..!

Leave a Reply