ஒலிம்பிக்

0

யிர்கள் வாழ அனைத்து தகுதிகளும் நிறைந்த கிரகம் பூமி மட்டுமே என்பதைப் போல, ஒலிம்பிக் போட்டிக்கு நிகரான வேறு விளையாட்டுப்போட்டி எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய கனவாகும். பெருமைக்குரிய இந்த ஒலிம்பிக் போட்டி தோன்றி சுமார் 27 நூற்றாண்டுகளுக்கு மேலாகி விட்டது.

ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள கிரேக்க (கிரீஸ்) நாட்டில் தான் `ஒலிம்பிக்’ தோன்றியது. முதன்முதலில் `ஜ×யஸ்’ என்னும் கிரேக்கக் கடவுளின் புகழைப் பரப்பும் விழாவாக இந்தப்போட்டி நடத்தப்பட்டது. முதலாவது ஒலிம்பிக் விழா, கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, அதாவது கி.மு. 776-ம் ஆண்டு கிரேக்க நாட்டிலுள்ள `ஒலிம்பியா’ என்ற இடத்தில் நடைபெற்றது.

தொடக்கத்தில் ஒருநாள் போட்டியாக இருந்த ஒலிம்பிக், பின்னர் பலநாட்கள் விளையாடக்கூடியதாகவும், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியாகவும் மாறியது. நீண்டதூர ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், மல்யுத்தம், எடை மிகுந்த கல்லை எறிதல் போன்ற அன்றாட கேளிக்கை விளையாட்டுகளே ஆரம்பகால ஒலிம்பிக்கில் இடம்பெற்றன.

ஒலிம்பிக் விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு `ஆலிவ் இலை கிரீடம்’ சூட்டப் படும். அத்துடன் `வெற்றிவீரன்’ என்ற பட்டமும் வழங்கப்படும். ஆரம்ப காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் போட்டியாக ஒலிம்பிக் திகழ்ந்தது. போட்டியைப் பார்க்கக்கூட பெண்களுக்கு அனுமதி கிடையாது. போட்டி நடைபெறும் காலங்களில் `போர்நிறுத்த உடன்படிக்கை’ அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கிரேக்கர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஒலிம்பிக் போட்டி, ரோமானியர்களின் படையெடுப் பால் தனது சிறப்பை இழக்க நேர்ந்தது. கி.பி. 393-ம் ஆண்டு ரோமானியப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ், ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதித்தார். இதனால் சுமார் 16 நூற்றாண்டுகள் வரை ஒலிம்பிக் போட்டி நடை பெறவில்லை.

இனி ஒலிம்பிக் போட்டி நடக்கவே நடக்காது என்ற நிலையில், பிரான்சு நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பாரோன் பியர்டி கோபர்ட் என்பவரின் தீவிர முயற்சியால் ஒலிம்பிக் போட்டி புத்துயிர் பெற்றது. அவருடைய ஏற்பாட்டின் பேரில் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் 1894-ம் ஆண்டு பாரீசில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி, 1896-ம் ஆண்டு கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்சில் ஏப்ரல் 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் 13 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வீரர்கள் கலந்து கொண்டனர். ஜிம்னாஸ்டிக், சைக்கிள் பந்தயம், மாரத்தான், துப்பாக்கி சுடுதல் ஆகிய 4 விளையாட்டுகள் அந்தப் போட்டியில் இடம்பெற்றன.

அதன்பின்னர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 1900-ம் ஆண்டு பாரீசில் நடந்த இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக பெண் களுக்கான போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதல் உலகப்போர் காரணமாக 1916-ம் ஆண்டும், இரண்டாவது உலகப்போர் காரணமாக 1940 மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இறுதியாக 2008-ம் ஆண்டு 29-வது ஒலிம்பிக் போட்டி, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடை பெற்றது. 28 வகையான விளையாட்டுகளில் அமைந்த 302 போட்டிகளில் சுமார் 10 ஆயிரத்து 500 வீரர்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஒலிம்பிக் போட்டி 2012-ம் ஆண்டு இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடைபெற உள்ளது.

Leave a Reply