நான் நலமில்லை… நீ?

3

love25பள்ளிப் படிப்பில் பாதியைக் கூட இதுவரை யாரும் தாண்டியிராத கிராமத்துக்காரன் நான். ?கல்லூரியில் படிக்கப் போகிறேன்? என்று சொன்னதும்,  ?வேணாம் கண்ணு! டவுனுப் பக்கம் படிக்கப் போனா, அங்கேயிருந்து திரும்பி வரும்போது ஒரு புள்ளையைக் கூட்டிட்டு வந்திருவாங்களாம்… வேண்டாம்டா!? என்று பதறினாள் என் அம்மா.

எனக்குச் சிரிப்புதான் வந்தது. ?ஆமாமா! அங்க பட்டம் கொடுக்கும் போது, கூடவே ஒரு புள்ளையையும் கொடுப்பாங்களாக்கும்! அதெல்லாம் யாரோ ஒண்ணு, ரெண்டு பேரு பண்ற தப்பும்மா!? என்றேன்.

அப்படின்னா, எந் தலையில சத்தியம் செஞ்சுட்டுப் போ!? என்று சத்தியம் வாங்கிக்கொண்டு, கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள். மனசு நிறைய மகிழ்ச்சியோடு நான் பஸ் ஏறும்போது கூடத் தெரியாது… என் சத்தியத்துக்கு வேட்டு வைக்க, ஒரு மோகினியைப் போல நீ காத்திருப்பாய் என்று!

விடுதியில் சேர்ந்து, வகுப்புக்குள் நுழைந்த முதல் நாள், முதல் பாட வேளையிலேயே உன்னைப் பார்த்தேன். ஐயோ… அழகாக இருக்கலாம். ஆனால், இப்படி அநியாய அழகாகவா இருப்பாள் ஒருத்தி!

எதேச்சையாக நீ என்னைப் பார்த் தாலே, இஷ்டத்துக்கு எகிறியது இதயத் துடிப்பு! வேறு வழியே இன்றி விழுந்தேன் காதலில். ஆனால், அதை உன்னிடம் சொல்லவே இல்லை… கடைசி வரை!

கணவனை இழந்து, தன்னந்தனியாக வயல்காட்டில் வேலை செய்து, என்னை இதுவரை கொண்டுவந்த என் அம்மாவின் முகம்தான் என்னை உறுதியாகத் தடுத்தது உன்னிடம் என் காதலைச் சொல்வதை!

ஆனால், மூன்றாவது வருடம் முடிவை நெருங்க நெருங்க… உன் பார்வைகளும் செயல்களும், நீயும் என்னைக் காதலிப்பதை உணர்த்தி, என்னை உயிரற்றுப் போகச் செய்தன!

கிட்டத்தட்ட கல்லூரியே விரும்பும் அழகோவியமே! போயும் போயும் நானா கிடைத்தேன் உனக்கு? என்னை மன்னித்துவிடு. உன்னோடு வாழ்கிற பாக்கியம் எனக்கில்லை! என்று உன்னிடம் மானசீகமாக கெஞ்சிக் கேட்டுக்கொண்டு வந்துவிட்டேன்.

ஆனால், நீ விடவில்லை. நாள் ஆக ஆக… மாதம் ஆக ஆக… வருடம் ஆக ஆக… உன் நினைவு விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருந்தது.

உன்னைப் பிரிந்து வந்து, ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் அறுபது வருடங்களானாலும் என் இதயத்தில் உன்னைத் தவிர, வேறு யாரும் நுழையவே முடியாது என்பதை என் அம்மா, என்னைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லும் போதெல் லாம் வேண்டாம் என்று நான் உறுதி யோடு உதிர்த்த சொல் உணர்த்தியது.

கடைசியில் ஒரு நாள், ?ஏம்ப்பா கல்யாணமே வேணாங்குற? அங்கிட்டுப் படிக்கும்போது, யார் மேலயாவது ஆச வெச்சிட்டியா?? என்று பொறுக்க மாட்டாமல் அம்மா கேட்டபோது, என் கண்கள் கலங்கி விட்டன!

?அய்யோ ராசா… தப்புப் பண்ணிட்டனே! சத்தியம் வாங்கிட்டு, உன் மனசைக் கட்டிப் போட்டுட்டனே! யார்றா அந்தப் புள்ள? நீ அவளையே கட்டிக்க? என்று தழுதழுத்தாள் என் தாய்.

?இந்நேரம் அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகியிருக்கும்மா!? என்றேன் ரணமான இதயத்தோடு!

?இருக்காதுடா… இருக்காது! போடா, போய்ப் பார்த்துட்டு வா!? என்று அரற்றி அனுப்பினாள் என் அம்மா. அவள் நினைப் பது மாதிரி, உனக்குக் கல்யாணமாகாமல் இருந்தால், எல்லாம் நன்றாகவே முடியும்! ஆகியிருந்தால்?

உன்னை என்று பார்த்தேனோ அன்றிலிருந்து இன்று வரை உன்னை நான் காதலித்துக்கொண்டு இருக்கிறேன். என் ஆயுசு தீரும் வரை உன்னையே காதலிப்பேன் என்பதை மட்டும் சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்துவிடுவது என்கிற முடிவுடன், உன் வீட்டைக் கண்டுபிடித்துக் கதவைத் தட்டினேன்.

நீதான் திறந்தாய். எதிர்பாராமல் என்னைப் பார்த்த மகிழ்ச்சியில், ஆர்வமாக என்னை அழைத்து உட்காரச் சொல்லி, அம்மா, அண்ணன், அண்ணி என்று ஒரு கூட்டத்தையே அறிமுகம் செய்து வைத்தாய். கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிவிட்டு, ?எங்கே உன் கணவர்?? என்றேன்.

?கணவனா?!? என்றனர் எல்லோரும். ?இன்னும் இவளுக்குக் கல்யாணமே ஆகலியே!? என்றார் உன் அம்மா. தொடர்ந்து, ?நீயாவது சொல்லுப்பா! கல்யாணப் பேச்சு எடுத் தாலே, கையெடுத்துக் கும்பிடுறா. மனசுக் குள்ளயே யாரையோ விரும்பியிருக்கா. ஆனா, அது அவனுக்கும் புரியலை. இவளுக்கும் சொல்ற தைரியம் இல்லை. எங்ககிட்டயாவது அவன் யாருனு சொல்லுடி. நாங்க போய்ப் பேசுறோம்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறா! இவளை இங்க இப்படித் தவிக்க விட்டுட்டு, அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்க முடியுமா, நீங்களே சொல்லுங்க தம்பி!? என்றார்.

?அவன் நல்லா இல்லை!? என்றேன்.

?அவன் யார்னு தெரியுமா??

சொன்னேன். அம்மாவின் சத்தியத் தில் ஆரம்பித்து அத்தனையும் சொன் னேன். கேட்டுவிட்டு எல்லோரும் சிரித்தனர். பின், நம்மைத் தனிமையில் விட்டுவிட்டு நகர்ந்ததும், தேங்க்ஸ் என்றாய்.

அதை நாமிருவரும் சேர்ந்து காதலுக்குச் சொல்வோம்!

கண்களுக்குள் பாப்பா
இருப்பதாகச்
சொல்கிறார்களே என்று
கண்ணாடி முன் நின்று
உற்று உற்றுப் பார்த்தேன்.

அட, ஆமாம்!
என் இரண்டு கண்களுக்குள்ளும்
ரெண்டு குட்டிப்பாப்பாவாக
நீதான் அமர்ந்திருக்கிறாய்!

தபூ சங்கர்-

Leave a Reply