அதிக நிறை கொண்ட குழந்தையை பிரசவித்த ஜேர்மனியப் பெண்

0

Germany-Babyஜேர்­ம­னியில் பெண் ஒருவர் 6.1 கிலோ கிராம் எடை உள்ள குழந்­தையை சுக பிர­சவம் மூலம் பெற்­றெ­டுத்­துள்ளார்.

ஜேர்­மனி லீப்­சிக்கில் உள்ள பல்­க­லைக்­க­ழக வைத்தியசாலையில் இளம்பெண் ஒருவர் பிர­ச­வத்­திற்­காக அனு­ம­திக்­கப்­பட்டார். அவ­ருக்கு கடந்த 26ஆம் திகதி பெண் குழந்தை பிறந்­துள்­ளது. 6.1 கிலோ கிராம் எடை­யுள்ள பெரிய குழந்­தையை அவர் சுக பிர­ச­வத்தில் பெற்­றெ­டுத்­துள்ளார்.

வழக்­க­மாக குழந்தை பெரி­ய­தாக இருந்தால் சிசே­ரியன் மூலம் தான் குழந்­தையை எடுப்­பார்கள். ஆனால் அப்பெண் சுக பிர­ச­வத்தில்

பெற்­றெ­டுத்­துள்­ளமை பல­ரையும் ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது. அந்த பெண் கர்ப்பம் தரித்த பிறகு அவ­ருக்கு நீரிழிவு நோய் ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் அது கவ­னிக்­கப்­ப­டாமல் இருந்­துள்­ளது. அதனால் தான் குழந்தை மிகவும் பெரி­ய­தாக பிறந்­துள்­ளது என்று கூறப்­ப­டு­கி­றது. அந்த குழந்­தைக்கு ஜஸ்லீன் என்று பெயர் வைத்­துள்­ளார்கள்.

ஜஸ்லீன் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்­தாலும் அவரும், அவ­ரது தாயும் நல­மாக உள்­ள­தாக மருத்­து­வர்கள் தெரி­வித்­தனர். ஜேர்­ம­னியில் இது­வரை பிறந்த குழந்தைகளிலேயே ஜஸ்லீன் தான் மிகப்பெரிய குழந்தை என்­பது குறி­ப்­பி­டத்­தக்­க­து.

Leave a Reply