மதம்!

0

elefantஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918 -19 ல் ஒரு வழக்கு.

யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவகளுக்குள் ஏற்பட்டது. அப்பொழுது நீதி மன்றங்களை கடந்து, பிரைவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு உத்தரவு போட்டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது.

அதன்படியே ஸ்ரீரங்கத்திலிருக்கிற வடகலை நாமக்காரர்கள் கெட்டிமேளத்தோடு வந்து ஒரு மாதம் யானைக்கு வடகலை நாமம் போட்டார்கள், பிறகு தென்கலை நாமக்காரர்கள் ஒரு மாதம் யானைக்குத் தென்கலை நாமம் போட்டார்கள். மூன்று மாதங்கள் நடந்த இந்த அல்லோகலத்தில் யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டதாம்.

மறுநாள் பத்திரிகைக்கைகளில் ஸ்ரீரங்கத்து யானைக்கு மதம் பிடித்து சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது என்று செய்தி வந்தது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதே பத்திரிகைகளில் வேறு செய்தி கூறியதாவது, ஸ்ரீரங்கத்து யானைக்கு மதம் பிடிக்கவில்லை, அப்படி தவறுதலாகப் பிரசுரிக்கப்பட்டது, உண்மையில் யானைக்கு “மதம்” பிடிக்காமல்தான் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியது, என்று விளக்கம் கொடுக்கப்பட்டதாம்.

-வாலி விஜய் டிவியில்

Leave a Reply